விலைமாதே வருந்தாதே

விலை மாதுவின்
கற்புக்கு விலை ஏது
இந்த உலகினிலே

விலை போவது அவள்
உடல் மட்டுமல்ல,
அவள் மனமும் தானே

விடை தெரியுமா
யாருக்கேனும் அவள்
மனதினில் வரும்
கேள்விகளுக்கே?

வினை செய்தது அவள்
மட்டும் தானா?
அவளிடம் வரும்
ஆடவரின் வினை
அதனினும் கெடுதல் அன்றோ?

விடுதலை என்றோ,
அவள் உடலுக்கே?
வாரத்தில் ஒரு நாளேனும்
கிடைத்திடுமோ அது
அவளுக்கே

விதை செய்வது
வினையை யார், யாரோ?
அதை கொள்வது
அனு தினமுமே
அவள் உடலே

விலை மாதே, நீ
வருந்தாதே, நீ
போவது சொர்கத்திற்கே,
ஏனெனில் நீ மகிழ்வித்தாய்
பலரையே, நிதம் இரவினிலே

சிலர் போவது நரகத்திற்கே,
ஏனெனில் அவர் வதைத்தார்
உந்தன் உடலையும், மனதையும்
ஒருங்கிணைத்தே

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (10-Jun-14, 5:58 pm)
பார்வை : 78

மேலே