வாகா

மயிலேறி வந்தவாஎன் மனமேறி வா கா
மலையேறி நின்றவா என் மதியேறி வா கா
கடலேறி கந்தா வாஎன் கதிதீர்க்க வா கா
கண்ணேறி வந்தவாஎன் பண்ணேறி வா கா !

நிலவொழுக நின்றவாஎன் உளமுருக வா கா
பனியொழுகு மலையவா பரிவொழுக வா கா
கனலொழுகு விழியில் கனிவொழுக வா கா
அமுதொழுகு மொழியவாஉன் அருளொழுக
வா கா !

கருப்பொருள் தந்தவாஎன் கருத்துள்ளும் வா கா
பருப்பொருளும் ஆனவாஉன் பதமலர்தா வா கா
வரும்பொருள் எல்லாம்நீ தரும்பொருளாக வா கா
வேறுபொருளே வேண்டா வடிவழகாநீ வா கா !

முன்வினை தீர்ப்பவாயென் பின்வினையும்
போக்க வா கா
ஊழ்வினை உந்தவேநான் செய்வினைதீர வா கா
போகுவினை யெல்லாம்உன் பொன்னடிதா
வா கா
மாறுவினை யெல்லாம் மருகாநீ உந்தனைதர
வா கா !

எழுதியவர் : நேத்ரா (10-Jun-14, 8:36 pm)
பார்வை : 94

மேலே