Nethra - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Nethra |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 20-Aug-1964 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 24-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 1049 |
புள்ளி | : 423 |
என் உந்து சக்திகள்: மொழியன்பு, இயற்கை ரசனை, இசை வேட்க்கை
முகநூலில் படித்த செய்தி
=======================
பாரத பிரதமர் நரேந்திர மோடியின்
அறிக்கை;90நாட்களுக்கு இந்திய
தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்தினால்
இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 2 =$1
என்ற அளவுக்கு கொண்டு வருவதாக
உறுதி அளித்து இருக்கிறார்
எனவே இந்திய
பொருட்களை பயன்படுத்தி நாமும்
உறுதுயாக நிற்போம்........இந்த
செய்தியை அனைவரிடத்திலும்
கொண்டு சேருங்கள் நண்பர்களே.......
கருந்தேக வானவில்லாய்
உன் புருவம் வீற்றிருக்க - மழைச்
சாரலின் ஓரத்தில் நான் !
ஒரு புருவம் நிறுத்தி
மற்றொன்றை உயர்த்தி
எனையாளும் எதிரியவள் !
புருவங்களிடையே - குட்டி
குங்கும பாலம் - கண்களுகிடையே
கனவுக்குட்டிகளை கடத்துவாளோ ?
சமயங்களில் மீசையாகிறது புருவம்
உன்னிரு விழிகளால்
நான் செரிக்கப்படும்போது !
உம்புருவ கருவனத் தோட்டத்தில்
நான் - என் நேற்றைய
கனவுகளை தேடுவதுண்டு !
- வினோதன்
மயிலேறி வந்தவாஎன் மனமேறி வா கா
மலையேறி நின்றவா என் மதியேறி வா கா
கடலேறி கந்தா வாஎன் கதிதீர்க்க வா கா
கண்ணேறி வந்தவாஎன் பண்ணேறி வா கா !
நிலவொழுக நின்றவாஎன் உளமுருக வா கா
பனியொழுகு மலையவா பரிவொழுக வா கா
கனலொழுகு விழியில் கனிவொழுக வா கா
அமுதொழுகு மொழியவாஉன் அருளொழுக
வா கா !
கருப்பொருள் தந்தவாஎன் கருத்துள்ளும் வா கா
பருப்பொருளும் ஆனவாஉன் பதமலர்தா வா கா
வரும்பொருள் எல்லாம்நீ தரும்பொருளாக வா கா
வேறுபொருளே வேண்டா வடிவழகாநீ வா கா !
முன்வினை தீர்ப்பவாயென் பின்வினையும்
காதலுக்கு
உயிர்த்துளி...!
கன்னத்தில் இடும்
ஒத்தடம்...!
காதலின்
வழித்தடம்...!
இதழ்கள் வாசிக்கும்
இனிமையான இசை...!
இதழ்கள் செய்யும்
இதமானத் தட்டச்சு...!
வார்த்தைகளற்ற
வசீகரமான மொழி...!
காதலர்களின்
வலி நிவாரணி...!
இதயம் உள்ளவரை
இது நிலைக்கும்...!
இதயம் உள்ளவரை
இதில் நனைக்கும்...!
சிபாரிசின்றி கிடைக்கும்
செல்லப் பரிசு...!
இன்பத்தின்
அன்பானத் தழுவல்கள்...!
இதழ்களின்
அழகானத் தகவல்கள்...!
சப்தம் போட்டால்
இனி யுத்தம் செய்யாதே
முத்தம் போடு....!
இனி...
மொத்தமும் உன்வசம்
காரணம் முத்தத்தின் சகவாசம்...!
பச்சையம்மா உடம்பெங்கும்
வெள்ளை நரம்போடுது.
ஆறுகளும் அருவிகளும் !
$$$$$$
நாதியத்துக் கிடக்குது
நடுச்சாலையில் வெள்ளிப் பணம்.
மர நிழல் !
$$$$$$
மரகதப் பெண்கள் பவளம் போர்த்து
சாலையின் இருமருங்கும் வரிசையில்.
குல்மொஹர் மரங்கள்!
கிறுக்கி எழுதியதாலோ
கிறுக்கு பிடித்து எழுதியதாலோ
பிடித்த கிறுக்கு அரைகுறையாய்
தெளிந்ததால் எழுதியதோ !
படித்தவுடன் கிறு கிறுவென்று
சுற்றுமே அதனாலோ.
எழுதியவுடன் கிறு கிறுவென்று
தேர்வுப் பட்டியலில்
ஏறுதே அதனாலோ !
தமிழ் கிறுக்கர்கள் எழுதியதாலோ
பொருளின்றி எழுதியதாலோ
பாடு பொருளுமின்றி எழுதியதாலோ
எதனாலோ "கிறுக்கல்கள்"
தளத்தில் அடிக்கடி தட்டுப் படுகிறதே,
என்னையும் சேர்த்துதான் !
(இப்பவே கண்ணைக் கட்டுதே,
வடிவேலு பாணியில் !)
தலைகீழாய் பற்றி எரிந்து தீர்க்குது
மெழுகுவத்திகள் ரெண்டு.
கலவி.
(தலைப்பும் கீழ் தலையாய் !!)
ஆட்டிப் படைக்கும் சிந்தனைகள்.
பழந்தமிழ் கவிதைகளில் காணப்படும் காதல் அல்லது காமம் பற்றிய கவிமரபு ‘அகம்’ எனும் பிரிவில் அடக்கப்பட்டு அதுவும் அன்பினைந்திணை என ஒரு கூறாகவும் கைக்கிளை, பெருந்திணை ஆகிய இரு வகையும் பிறிதொரு கூறாகவும் வகுக்கப்பட்டு வந்துள்ளது.
இதனை நம்பி அகப் பொருள்
ஐந்திணையுடையது
அன்புடைக் காமம்
கைக்கிளையுடையது
ஒருதலைக் காமம்
பெருந்திணை என்பது
பொருந்தாக் காமம்
என மூவித அடைமொழி கொடுத்து வழங்கப் படுவனவற்றுள் அறம் பொருள் இன்பம் உள்ளிட்ட அன்பினைந்திணை உடைய அன்புடைக் காமமொன்றே ஒழுக்கமுடையதென்றும் பிற இரண்டும் குறைபாடுடையன என்றும் இதனாலேயே புலவர்களால் இவை இரண்டும் ஒதுக்கப்ப