சிதறல்கள் -2

பச்சையம்மா உடம்பெங்கும்
வெள்ளை நரம்போடுது.
ஆறுகளும் அருவிகளும் !
$$$$$$
நாதியத்துக் கிடக்குது
நடுச்சாலையில் வெள்ளிப் பணம்.
மர நிழல் !
$$$$$$
மரகதப் பெண்கள் பவளம் போர்த்து
சாலையின் இருமருங்கும் வரிசையில்.
குல்மொஹர் மரங்கள்!