இயற்கையை கரைக்காமல் காத்துநிற்போம்

விரிந்து கிடந்த விளை நிலத்தை
விரல் விட்டு எண்ண வைத்தோம்...
ஆலமரத்தை அழித்து விட்டு
ஆடம்பர மாளிகைகள் கட்டிவைத்தோம்...
காற்றினில் மாசு கலந்து
ஓசோனில் ஓட்டையிட்டோம்...
பாலித்தின் பையை குவித்து
பாரினை மூச்சிரைக்கச் செய்தோம்..
முன்னேற்றம் என்றுக் கூறி நேற்று
முளைத்த விதைகளையும் அழித்து விட்டோம்..
முப்போகம் விளைந்த நிலத்தை ஒரு
துளி நீருக்கு ஏங்க செய்தோம்..
கரைதொட் டோடிய ஆறினில்
கழிவு நீர் ஓட வைத்தோம்...
நகரமைப்பு என்று சொல்லி
நடுகாட்டிலும் கட்டிடங்கள் நட்டு வைத்தோம்....
'ஐம் பூதங்களையும்' காசுக்காக,
கற்பழித்து விட்டோம்....
விளைவு...
காடுகளை அழித்து விட்டு
கருமேகங்களுக்கு காத்து நிற்கிறோம்...
சுற்றியிருந்த நீரை தொலைத்துவிட்டு
பாட்டில் நீருக்கு தவம் கிடக்கிறோம்....
ஒரு சொட்டு நீருக்கு
ஒர் லட்சம் மைல் தாண்டி அண்டம் தேடுகிறோம்...
ஓசியில் இயற்கை மடியில் தவழ்ந்த நாம்
ஏசி காற்றுக்கு தவித்து நிற்கிறோம்....
சுற்றித் திரிந்த பறவைகளின்
சுதந்திரம் பறித்து கூண்டினில் காண்கிறோம்...
'இயற்கையை செயற்கை கொண்டு மீட்பது
கானல் நீர் கனவு....,'
மிஞ்சி நிற்கும் இயற்கையாவது நம்
சந்ததிக்கு சேமித்து வைப்போம்...
வருங்காலமாவது வையத்தை
வாழ்விக்கட்டும்.........