கிறு கிறு கிறுக்கல்கள்
கிறுக்கி எழுதியதாலோ
கிறுக்கு பிடித்து எழுதியதாலோ
பிடித்த கிறுக்கு அரைகுறையாய்
தெளிந்ததால் எழுதியதோ !
படித்தவுடன் கிறு கிறுவென்று
சுற்றுமே அதனாலோ.
எழுதியவுடன் கிறு கிறுவென்று
தேர்வுப் பட்டியலில்
ஏறுதே அதனாலோ !
தமிழ் கிறுக்கர்கள் எழுதியதாலோ
பொருளின்றி எழுதியதாலோ
பாடு பொருளுமின்றி எழுதியதாலோ
எதனாலோ "கிறுக்கல்கள்"
தளத்தில் அடிக்கடி தட்டுப் படுகிறதே,
என்னையும் சேர்த்துதான் !
(இப்பவே கண்ணைக் கட்டுதே,
வடிவேலு பாணியில் !)