rajakodi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  rajakodi
இடம்:  dindigul
பிறந்த தேதி :  27-Dec-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  10-Jan-2014
பார்த்தவர்கள்:  97
புள்ளி:  13

என் படைப்புகள்
rajakodi செய்திகள்
rajakodi - எண்ணம் (public)
18-Aug-2017 6:26 pm

வெற்றிகளின் போது
நான் முகம் புதைத்துக் கொண்ட
மடி எங்கே?

சிறுசோகமும் என்னை தீண்டாமல்
என் தலைசாய்த்துக் கொண்ட
தோள்கள் எங்கே?

சிறு காய்ச்சல்
நான் கொண்டாலும்
ஏங்கி உடல் இளைத்த
அந்த நேசம் எங்கே?

நோய் காணும் போது
உன் தாயாய் என்னை காணும்
மகள்களுக்கு மட்டுமே கிடைக்கும்
அந்த பாசம் எங்கே?

ஒவ்வொரு விடியலும்
உம் காலை வணக்க குறுந்தகவல்
வந்து சேராதோ என்னும்
தேடலோடு தொடங்கி...

ஒவ்வொரு இரவும்
இணைந்து உண்ட இரவு உணவுகளும்,
நமது இரவுநேர 
உரையாடல்களும்,
திரும்ப வருமோ என்ற
ஏக்கத்தோடும் நகருகிறது...

அரை நிமிடம்  கூட
என்னை மறவாமல் 
மனதில் சுமந்த தந்தையே!
வாழ்நாள் முழுவதும்
எவ்வாறு உம் நினைவுகளை
மனதில் சுமந்து கடந்தேனோ???

என் விரல்களின் நடுக்கம்
இவ்விசைப்பலகையும்,
என் கண்ணீரின் கணம்
இந்த தொடுத்திரையுமே அறியும்!

உயிர் தந்த உறவே
என்னை விட்டு
எங்கே  சென்றாயோ!!!

மேலும்

rajakodi - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jun-2016 10:09 am

மழை காலம்
குடைகளுக்குள்
மறைந்து நின்ற
மலர்களுக்கு இடையே
என் குளிர் மலரை
கண்டுகொண்டாயே
என் உயிரே !
மகிழ்ச்சியில்
என்னை விட்டு
அவள் விழி தேடி
ஓடி விட்டாயே
என் உயிரே !!
என்னை போல
நீயும் அவள் மீது காதல் கொண்டாயோ !!!

மேலும்

rajakodi - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jun-2015 11:48 am

குறுந்தகவல் தரும்
உன் சிறு புன்னகை
ஒளி சிதறல் செய்யும்
உன் திரு விழிகள்
இவைகளுக்காய்
காத்துக்கிடகின்றோம்,
நானும் என் புகைப்பட கருவியும் !!

மேலும்

rajakodi - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jun-2015 11:35 am

ஆழமான அன்பையும்
சுக்கு நூறாக்கி சிதறவிடும்
எளிய விலை அணு குண்டு - சொல் !
அன்பை தகர்பதொடு மட்டுமின்றே
மீண்டும் தழைக்க விடாது ஆகையால் !!!

மேலும்

rajakodi - சதீஷ்~ரவிச்சந்திரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Nov-2014 6:02 pm

இன்றைய சமூகத்தில் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பது எது?

மேலும்

படித்து முன்னேறுவதற்கு பதில், செல்போன், அதி வேக மோட்டார் பைக் வாங்கி விட்டால் பெரிய சாதனை என்று நினைத்துக் கொண்டு பெண்கள் பின்னால் அலையும் கூட்டம் மட்டும் தான், தங்கள் முன்னேற்றத்திற்கு தானே முட்டுக்கட்டை போட்டுக் கொள்கிறார்கள். மற்றவர்கள் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். 06-Nov-2014 7:29 pm
வேகம்... மோகம் 06-Nov-2014 11:27 am
மன தயக்கம் மட்டுமே ! 06-Nov-2014 10:24 am
சமுகம் தான் வேறு என்னவாக இருக்க முடியும் ???? 06-Nov-2014 2:09 am
rajakodi - வினோத் பாஸ்கரன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-Nov-2014 5:20 am

புகை வருமிடத்தில் புன்னகை வந்தால்.,
எமனும் சற்று ஏமாந்து போவான்!!!!!

மேலும்

rajakodi - சர் நா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Jun-2014 6:14 pm

முகநூலில் படித்த செய்தி
=======================

பாரத பிரதமர் நரேந்திர மோடியின்
அறிக்கை;90நாட்களுக்கு இந்திய
தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்தினால்
இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 2 =$1
என்ற அளவுக்கு கொண்டு வருவதாக
உறுதி அளித்து இருக்கிறார்
எனவே இந்திய
பொருட்களை பயன்படுத்தி நாமும்
உறுதுயாக நிற்போம்........இந்த
செய்தியை அனைவரிடத்திலும்
கொண்டு சேருங்கள் நண்பர்களே.......

மேலும்

கனியட்டும் காலம் ......... 11-Jun-2014 7:56 am
நிச்சயம் நண்பா..... 11-Jun-2014 7:55 am
அருமை, சாத்தியமானால் ! 10-Jun-2014 9:09 pm
இதற்காகவே மோடி அவர்களை பாராட்டலாம். 10-Jun-2014 9:05 pm
rajakodi - முனைவர் இர வினோத்கண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jun-2014 8:22 pm

கருந்தேக வானவில்லாய்
உன் புருவம் வீற்றிருக்க - மழைச்
சாரலின் ஓரத்தில் நான் !

ஒரு புருவம் நிறுத்தி
மற்றொன்றை உயர்த்தி
எனையாளும் எதிரியவள் !

புருவங்களிடையே - குட்டி
குங்கும பாலம் - கண்களுகிடையே
கனவுக்குட்டிகளை கடத்துவாளோ ?

சமயங்களில் மீசையாகிறது புருவம்
உன்னிரு விழிகளால்
நான் செரிக்கப்படும்போது !

உம்புருவ கருவனத் தோட்டத்தில்
நான் - என் நேற்றைய
கனவுகளை தேடுவதுண்டு !

- வினோதன்

மேலும்

மிக்க நன்றி தோழரே ! 25-Jun-2014 1:24 pm
தமிழ் அமுதை அழகு ரசம் கலந்து அசதிவிட்டீர் ! 20-Jun-2014 12:00 pm
ஹா ஹா ஹா...நன்றி அக்கா ! 14-Jun-2014 2:05 pm
நல்ல கவனிப்பு! 13-Jun-2014 8:51 pm
rajakodi - rajakodi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jun-2014 6:43 am

பயணித்தது நீ
பயணப்பட்டது என் மனம்!
என்னிடமிருந்து உன்னிடம்!!

மேலும்

அருமை நட்பே 09-Jun-2014 12:21 pm
அருமை 08-Jun-2014 12:27 pm
அழகு நண்பரே !!வரிகளும் படமும் தான் .. 08-Jun-2014 9:26 am
நல்ல பயணம் 08-Jun-2014 9:14 am
rajakodi - rajakodi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jun-2014 6:33 am

கோடை மழைக்குள்
குடைஇன்றி வந்த தேவதையே!
உன் அழகு கரைந்து வடிகின்றதே,
உன் கன்னக்குழி தாண்டி இறங்கும்
ஒரு துழி நீரை
என் உள்ளங்கை குழிக்குள்
நிரப்பிக்கொள்ள அனுமதிப்பயோ??
என் உயிரே!!!!!!!

மேலும்

அனுமதி கிடைக்கட்டும் ..நன்று .. 08-Jun-2014 9:28 am
அனுமதி வேண்டி காத்திருக்கிறீர் கிடைக்கும் 08-Jun-2014 9:13 am
துழி - துளி உள்ளங்கைக்குழிக்குள் எனும் இடத்தினில் தொண்டைக்குழிக்குள் என்று இருந்தால் ???? 08-Jun-2014 9:04 am
நன்று, நன்று. தங்கைக்கு ஒரு பூங்கொத்து பார்சலில் வருது ! 08-Jun-2014 6:52 am
rajakodi - Muras அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Aug-2010 7:35 pm

திமிராய் திரிந்த
கட்டிளம் காளையை
கடிவாளமிட கடவுள்
அனுப்பிய உன்னத
உறவு நீ கனி !!!

ஆம்!!! கனிமொழி
என் தங்கையின்
அருமை பெயர்
இது தான் !!!

முழங்கால் தேய
மூக்கு ஒழுக
நாக்கு நவிழ
நடை பயின்ற
அந்த நாள் முதல்
நீ அண்ணா என்று
அழைத்தது யாருக்கும்
கேட்டிடாத சொல் அது !!!

ஆம் !!! மூன்று வயது
பெரியவன் ஆனாலும்
டேய் என்று நீ
அழைக்கும் போது தான்
பாசம் அது
நெஞ்சை முட்டும் !!!

திண்ணையில் நீ
தினம் தினம் தவழையில்
குவளையில் நீர் கொண்டு
குளம் கட்டி நாம் குளித்தது
கதையல்ல நிஜம் !!!!

பனை ஓலையில்
கத்தாளாம் முள் குற்றி
வண்ணத்து பூச்சியிடம்
வண்ணம் சில பூசி
அடிக்கும் காற்றுடன்
ஆர்ப

மேலும்

மிக்க நன்றி உங்களின் அன்புக்கு .. !!! 22-Jul-2015 6:35 am
அருமை அண்ணா.......... 22-Jul-2015 4:49 am
மிக மிக அருமை 23-Jun-2014 12:40 pm
நன்றி நண்பா ... 22-Feb-2014 9:21 am
rajakodi - ஹரி ஹர நாராயணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Feb-2014 6:43 am

கண் கூச வைக்குது கதிரவன் அதை
கை விரல்களுக்குள் சிறை பிடித்தே தீருவேன்..!

கவலைத் தீவிரவாதிகளின் கட்டுப் பாட்டுக்குள் என்
கருத்தை அடிமையாகாமல் வைத்தே தீருவேன்..!!

நான் என்ற அகந்தை எனக்கில்லை இது என்
நம்பிக்கை என்பதன் வரையறை....!!

யார் என்ன சொன்னாலும் கவலையில்லை என்
யவ்வனம் என்பது கவிநிலை.....!!

சுடும் பகல் பொழுதிலும் நான் வளர்த்து ரசிப்பேன்
சுந்தரக் குளிர்வாய் வளர்பிறை....!!

சுகமாய் தமிழ் மென்று நின்று தின்று களித்து
சுலபமாய் தகர்ப்பேன் என் நரை...!!

ஆம்.....

இனியதை நினைத்தால் இளமை மிளிருமாம்..
இன்தமிழ் நினைக்கிறேன் நானும் - எனக்கு
இனிமையென்பது அதை விட்டால்

மேலும்

இனிமையும் புரியுமோ போர் ? தயிரைகடைய கிடைப்பது மோர்-இங்கே போர்க்காலை எடுக்க கிடைப்பது பேர்...! தமிழுக்கும் அமுதென்று பேர் - நன்றி 22-Feb-2014 10:51 am
வாழ்த்துக்கு நன்றி அக்கா 22-Feb-2014 10:47 am
நன்றி 22-Feb-2014 10:46 am
தெரியாமலா புரட்சிக் கவிஞர் சொன்னார் “தமிழுக்கும் அமுதென்று போர்” என்று. அருமையான படைப்பு நண்பரே. 22-Feb-2014 8:26 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

நிஷா

நிஷா

chennai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Nethra

Nethra

சென்னை
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்

இவரை பின்தொடர்பவர்கள் (5)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே