தங்கை !!!

திமிராய் திரிந்த
கட்டிளம் காளையை
கடிவாளமிட கடவுள்
அனுப்பிய உன்னத
உறவு நீ கனி !!!

ஆம்!!! கனிமொழி
என் தங்கையின்
அருமை பெயர்
இது தான் !!!

முழங்கால் தேய
மூக்கு ஒழுக
நாக்கு நவிழ
நடை பயின்ற
அந்த நாள் முதல்
நீ அண்ணா என்று
அழைத்தது யாருக்கும்
கேட்டிடாத சொல் அது !!!

ஆம் !!! மூன்று வயது
பெரியவன் ஆனாலும்
டேய் என்று நீ
அழைக்கும் போது தான்
பாசம் அது
நெஞ்சை முட்டும் !!!

திண்ணையில் நீ
தினம் தினம் தவழையில்
குவளையில் நீர் கொண்டு
குளம் கட்டி நாம் குளித்தது
கதையல்ல நிஜம் !!!!

பனை ஓலையில்
கத்தாளாம் முள் குற்றி
வண்ணத்து பூச்சியிடம்
வண்ணம் சில பூசி
அடிக்கும் காற்றுடன்
ஆர்பாட்டம் செய்த
அழகான நாட்கள் எங்கே !!!

பத்தாவது படிக்கும் போதும்
பரிட்சைக்கு நேரமானால்
பதறி அழும் உன் முகம்
பருவமழை பொய்தபின்
தூறல்களை தாங்கி நிற்கும்
தாமரை இதழ்கள் !!!

பொது தேர்வா அது ???
போனால் போகட்டும் என்றால்
மறுபடியும் முகம் கோணும்
மணமேடை மகள் போல !!!!

மாமனுக்கு மனம் இசைந்து
தாய் பிறந்த வீட்டிலே
நீ தாயாக போகையிலே
பச்சிளம் குழந்தை நீ !!!

சித்தி குழந்தை முதல்
உன் தங்கை குழந்தை வரை
ஒய்யாரமாய் செய்யும்
உனது ஒப்பனைகள்
ஓவியனின் கைகளுக்கே
வெட்ககேடு !!!!

விடுதியிலே விடுபட்ட
தாய் பாசம் அது!!!
ஆறு மாதத்தில்
அழகான கேரளத்தில்
அன்னையவே மறக்கவைத்த
மாற்று தாயம்மா நீ !!!

இருபது வயதிலே
இரு மடங்கு பண்பட்டவள் நீ !!!!
நாற்பது வயதிலே
நாடாள போபவள் நீ !!!
திருமணம் ஆனாலும்
தினம் நீ குழந்தை தான் !!
உன் அகவை ஆறு தான் !!!

கொஞ்சும் மழலை
உன்னில் தஞ்சம் ஆகி
விண்ணை விஞ்சி
உன் வாழ்வு சிறக்க
வாழ்த்தும் அன்பு
அண்ணன்
முரசொலி

எழுதியவர் : Muras (4-Aug-10, 7:35 pm)
பார்வை : 6359

மேலே