வினோதனின் குறும்பூக்கள் - 3
![](https://eluthu.com/images/loading.gif)
கருந்தேக வானவில்லாய்
உன் புருவம் வீற்றிருக்க - மழைச்
சாரலின் ஓரத்தில் நான் !
ஒரு புருவம் நிறுத்தி
மற்றொன்றை உயர்த்தி
எனையாளும் எதிரியவள் !
புருவங்களிடையே - குட்டி
குங்கும பாலம் - கண்களுகிடையே
கனவுக்குட்டிகளை கடத்துவாளோ ?
சமயங்களில் மீசையாகிறது புருவம்
உன்னிரு விழிகளால்
நான் செரிக்கப்படும்போது !
உம்புருவ கருவனத் தோட்டத்தில்
நான் - என் நேற்றைய
கனவுகளை தேடுவதுண்டு !
- வினோதன்