செருக்கு ஔவையின் சறுக்கு யானைக்கும் அடி சறுக்கும்

தமிழ் ஞானி ஆன ஔவையார் ஒரு முறை தமிழ்தொன்டு புரிய நடைபயணம் மேற்கொண்டிருந்தார்...

அப்போது வயல்வெளி வழியாகக் நடந்து சென்று கொண்டிருந்தார்.அச்சமயத்தில் ஓர் உழவன் தன் வயலுக்கு ஏத்தம் (ஏற்றம்) மூலம் தண்ணீர் இறைத்து கொண்டிருந்தார் .

ஏத்தம் என்பது பழங்காலத்தில் சால் எனப்படும் பெரிய மண் பாத்திரம் ஒருபுறம் கயிறு கொண்டு மரத்தில் கட்டி மறுபுறம் ஆள் ஏறி காலால் மிதிக்க (2 மரத்தை ஏறக்குறைய கூட்டல் குறிபோன்று அமைத்து அழுத்தம் கொடுக்க) சால் நீர்நிலையின் உள்சென்று தண்ணீர் மோந்து வரும் அதை இன்னொரு ஆள் வாங்கி வாய்க்காலில் ஊற்றி வர நீர் வயலுக்கு சென்று பாயும்.

அந்த விவசாயி தன் களைப்பை போக்க பல பாடல்கள் பாடுவது வழக்கம். அப்படி ஒரு பாடலையை ஔவையார் நடந்து வருகையில் பாடிக்கொண்டிருந்தார்.
அதாவது வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் பற்றிய அருமையான பாடல் அது. பாடிக் கொண்டு இருக்கும் போது சாப்பாட்டை தலைச்சுமையாக அவரது மனைவி எடுத்து வர சட்டென்று பாடலை நிறுத்தி விட்டு ஏற்றம் இறைக்காமல் கீழே இறங்கி சென்று விட்டார்.

பாடலின் வரிகள் மற்றும் வார்த்தைகளை அவ்வழியே சென்று கொண்டிருந்த ஔவையார் ரசித்த படியே வர உழவன் சாப்பிட சென்று விட்டபடியால் அடுத்த வரி என்னவாக இருக்கும் என ஔவையார் யூகிக்க முயற்சி செய்தார்...இயலவில்லை
தமிழ் மொழியில் புலமை பெற்ற தன்னாலே அடுத்த வரியை யூகிக்க முடிய வில்லை..

இந்த உழவன் ஏதோ வாயில் வந்ததை பாடுகிறார் போலும்...என எண்ணினார் ...
ஆனாலும் மனதில் சிறு சஞ்சலம் ...உழவன் சரியாக பாடி விடுவோனோ என்று...
தனக்கு நிறைய வேலை இருப்பதால் காத்திருக்க முடியாது...எனவே உழவனிடம் நேரிடையாக கேட்டுவிடலாம் என எண்ணி அந்த உழவனிடம் " ஏம்பா நீர் பாடிய பாடலின் அடுத்த வரி என்ன என்று " சற்று மிடுக்காக வினவினார்.

அதற்கு அந்த விவசாயி "அம்மையே எனக்கு ஏற்றம் மீது ஏறினால் தான் பாட வரும்... எனவே தாங்களும் என்னுடன் உணவு அருந்திவிட்டு... பிறகு நான் பாடும் போது கேட்டுச்செல்லுங்கள் " என்றார்...

இது ஔவைக்கு அவமானமாக இருந்தது.
தமிழ் புலமைபெற்ற தன்னை ஒரு விவசாயி காக்க வைப்பதா என செருக்கு உற்றார்...இருப்பினும் தமிழ் மீது உள்ள ஆர்வத்தில் காத்து கிடந்தார்..

அப்பாடலின் முழுமை பெறா வரி...
கதை படிக்கும் அன்பர்களுக்காக...

" மூங்கில் இலை மேல ....." இதுதான் ஔவை குழம்பிய வரி ...

மூங்கில் இலை மேல் என்ன இருக்கும்....அவ்விலையே சிறியது...அதிலும் அதன்முனை கூரானது... அதன் மேல் என்ன இருக்க போகிறது? ...எப்படி இந்த விவசாயி இந்த வரியை முற்று பெற செய்வான் என ஔவையார் யோசிக்கலானார்.

விவசாயி ஏற்றம் மீது ஏறினார். பாடலை முதலில் இருந்தே பாட தொடங்கினார்...
அப்பாடல் வாழ்வின் இன்ப துன்பங்கள் பற்றி கதிரவனை நாயகனாக (சூரியன்) உவமையாக கொண்டு பாடப்பெற்றது

"மூங்கில் இலை மேல தூங்கும் பனிநீரை
போல" என அடுத்த வரியை விவசாயி பாடிக்கொண்டு சென்றார்..
ஔவைக்கு தன்தமிழ் புலமை மீது ஏற்பட்டிருந்த செருக்கு உடைந்து விவசாயியை வாழ்த்தி விடை பெற்றார்


இவ்வரியில் உணர வேண்டிய கருத்து:
கதிரவன் ஒளிபட்டால் மூங்கில் இலை மேல் இரவு பெய்த பனியில் உறைந்திருந்த பனியின் நீர்திவளை ஒரு சொட்டு கூட இல்லாமல் காணாமல் போகும்...
இதுபோலவே நம் வாழ்வின் துன்பங்கள் தற்காலிகமானது ..

கதிரொளி பட்டால் இருள் விலகும் என்பதேயாகும்..

இக்கதை என்குடும்ப பெரியோர்களால் எனக்கு சொல்லப்பட்டவை... பாடலின் முழு வரிகள் நினைவில் இல்லை...


இக் கதையை எழுத்து.காம் இல் படித்து விட்டு ...கவி.நன்னாடன் அவர்கள் மூங்கில் இலை மேல் என வஞ்சி விருத்தப்பா வில் இப்பாடல் வரிகள் புது கவிதை தந்துள்ளார்...அதனால் இக் கதையை தற்சமயம் பாடல் வரிகள் முழுவதுமாக தந்து மாற்றி அமைத்துள்ளேன் அது வாசகர் வள்ளல்களின் பார்வைக்கு பதிவிடுகிறேன்.நன்றி

மூங்கில் இலை மேலே
தூங்கும் பனி நீரே
தூங்கும் பனி நீரை
வாங்கும் கதிர் ரோனே....

ஏற்றப்பாட்டு...

எழுதியவர் : பாளை பாண்டி (1-Jun-21, 5:33 pm)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 180

மேலே