பயம்
தினமும் 5 மணிக்கே அலுவலகத்தில் இருந்து கிளம்பும் அஞ்சலி அன்று வேலைப்பளு காரணமாக 6 மணி வரை இருக்க வேண்டியதாயிற்று.
அலுவலகத்திலிருந்து
வீடு அருகில் தான் என்றாலும் போகும் வழி ஆள் நடமாட்டமில்லாத பாதை அதிலும் போகும் வழியில் ஒரு சுடுகாடு மற்றும் ஏரியை ஒட்டிய பாதை பலர் அந்த பாதையில் பேய்களை கண்டதாக கூறியது அஞ்சலியின் நினைவுக்கு வந்தது .
இருப்பினும் ஓர் மன உறுதியோடு பேருந்து நிலையம் வந்தடைந்தாள் அஞ்சலி
பேருந்தில் ஏறும் போதே தன் ஊரை சேர்ந்தவர் யாரேனும் இருக்கிறார்களா என்று அஞ்சலியின் கண்கள் சுற்றிலும் நோட்டம் விட்டது.
அஞ்சலி எதிர் பார்த்தவாறே பேருந்தில் அவள் ஊரை சேர்ந்த இருவர் அமர்ந்திருந்தனர் அதை கண்டவுடன் அவளுக்குள் ஓர் பெருமூச்சு அப்பாடா என்று
ஆனால்,பேருந்து இரண்டு நிறுத்தங்களை தாண்டியவுடன் அந்த இருவரும் இறங்கியதை கண்டவுடன் அஞ்சலி அதிர்ச்சியானாள்.
பேருந்தில் இருந்தவாறே அண்ணா என்னனா இறங்கிட்டிங்க என்றாள்.
அதற்கு, அதில் ஒருவர் இல்லம்மா இங்க கொஞ்சம் வேலை இருக்கு கடைசி பஸ்ல வருவோம் என்றார்கள்.
அஞ்சலி மனதில் சிறு தயக்கதுடனே சரி அண்ணா என்றாள்.
அஞ்சலியின் மனதுக்குள் மீண்டும் பயம் தொற்றி கொண்டது.
அடுத்த இரண்டு பேருந்து நிறுத்தம் தாண்டியவுடன் நடத்துனரின் குரல் அஞ்சலியை மேலும் மிரட்டியது
"ஏரிகரை சுடுகாடு எல்லாம் இறங்குங்க"என்று அவரின் கனத்த குரலில் கூறியது.
ஒரு வித தயக்கத்துடனே பஸ்சை விட்டு
இறங்கினாள்.
இறங்கியவுடன் அருகில் இருந்த பிள்ளையார் கோவிலில் சாமி கும்பிட தொடங்கினாள் பிள்ளையாரப்பா நீ தான் எனக்கு வழி துணையா வரணும் எந்த கெட்டதும் என்னை நெருங்காம
என்று வேண்டிக்கொண்டு பிள்ளையார் பிள்ளையார் என்று வேண்டிக் கொண்டே நடக்க தொடங்கினாள்
சிறிது தூரம் கடந்ததும் அஞ்சலி சுடுகாட்டை நெருங்கினாள் அப்போது அங்கே ஒரு உடல் எரிந்து விரைத்து நிற்பதையும் அதை வெட்டியான் கட்டையால் அடிப்பதையும் பார்த்து பதறி போனால்.
என்னடா இது பிணம் அதுவா எழுந்து நிக்குது ஐயய்யோ தெரியாம தனியா வந்துட்டோமே என்று .
ஆனால் ,இன்னொரு புறம் அவளின் உள் மனம் கூறியது மனித உடலை எரிக்கும் பொழுது மனிதனின் இரத்த நாளங்கள் புடைத்து கொண்டு உடல் விரைத்து சில நேரங்களில் தானாக மேல் நோக்கி எழும் என்று புத்தகத்தில் படித்தது நினைவில்ல படிச்சவ தானே நீ ஏன் இப்படி பயபடுற என்று .
மேலும் ,சத்தமாக பிள்ளையாரை மறந்து விட்டு இப்போது முருகா முருகா என்று கூறி கொண்டே சென்றாள்.
அங்கிருந்து சிறிது தூரம் தான் கடந்திருப்பாள் அவளை யாரோ வேகமாக பின் தொடர்வதை உணர்ந்து பதட்டமாகி திக் என்று ஒரு நிமிடம் திகைத்து நின்றாள் பதறி போய் .
பின் தொடரும் சத்தம் வேகமாகி அவளை நெருங்க நெருங்க இதயதுடிப்பு மிகவும் வேகமாகி உடல் வியர்க்க தொடங்கியது .
திரும்பினாள் பேய்கள் நம்மை தாக்கும் என்று சிறு வயதில் கூறிய கதைகளை எண்ணி அப்படியே படபடத்து நின்றாள் .
இப்போது மேலும்
வேகமாக அந்த உருவங்கள் பின் தொடர்ந்து அந்த உருவங்கள் அவளை கடந்து செல்லும்போது லொள் லொள் என்று குரலெழுப்பி கொண்டே சென்றன.
அது வேறொன்றும் இல்லை இரு நாய்கள் ஒன்றை ஒன்று துரத்தி கொண்டு
இவள் அப்பாடா என்ற பெரு மூச்சோடு மீண்டும் நடக்க தொடங்கினாள் அஞ்சலி சிந்தையில் ச்சீ ஒரு நாய்க்கு போய் இப்படி பயந்துட்டோமே என்று எண்ணி கொண்டே நடக்க தொடங்கினாள்.
ஏரி கரையின் அருகில் நெருங்கிய போது சூழ்ந்து நின்ற மரங்களின் நிழலால் அவளுக்கு பாதை தெரியவில்லை அதனால் தன் பயணத்தை ஏரி கரையின் மீதே நடக்க துவங்கினால்.
அன்று பௌர்ணமி என்பதால் நிலவொளி அவள் செல்வதற்கு தெளிவாக வழிகாட்டியது .
தமிழ்நாடு மின்சாரம் அணைந்தாலும் அணையா விளக்கு நிலவு இருக்குற வரை பயமென்ன.
அடடா நாளைக்கு fbயில பதிவு போட ஒரு கருத்து கிடைச்சுடுச்சே.நாம எதை போட்டாலும் அங்க தான் வழிய சிலது காத்திட்டிருக்குதே u dont worry da அஞ்சலி என்று தனக்குள் பேசியவாறு சிரித்த முகத்துடன் நடக்க துவங்கினால்.
அப்போது தான் அது அவள் கண்களில் பட்டது அதை கண்டு பதறினால் அஞ்சலி .
ஆம்,
பெரிய ஜடா முடியுடன் ஒரு உருவம் கையில் பெரிய அருவாளோடு இவளை பார்த்தது போல் நின்று கொண்டு தலையையும் கையையும் ஆட்டியவாறு அஞ்சலி வரவை எதிர்பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தது .
இது வரை அவள் இது போன்ற ஒரு உருவத்தை அந்த ஊரில் பார்த்ததேயில்லை அதிலும் இவ்வளவு பெரிய ஜடா முடி அஜாகு பாவான தோற்றம்.
மாயாஜால படங்களில் வரும் மந்திரவாதி போல அவன் கையில் இருந்த ஆயுதம் கூட அதே போன்று.
அந்த காட்சியை கண்டு
திகைத்து நின்றாள் அஞ்சலி இதயம் பட படத்தது.
இது எதாவது பேயா இல்லை மந்திரவாதியா.பேய்னா கூட பெண் என்றால் இறங்கி விடும் ஆனா இந்த மந்திரவாதிங்க விட மாட்டானுங்களே .
அப்போ இன்னையோட அஞ்சலியோட ஆயுசு முடிஞ்சு போச்சா என்று புலம்பி கொண்டே மெதுவாக முன்னோக்கி நகர்ந்தாள்.
அஞ்சலி உடல் முழுக்க நனைந்திருந்தது பயத்தினால் வந்த வேர்வையில்.கண்களில் நீர் ததும்பி வெளிவராத குறைதான்.
அஞ்சிக்கொண்டே நகர்ந்தால் அப்போது ஊஊஊஊ என்று நரியின் ஊலை ஏரியிலிருந்து அந்த ஓலத்தை கேட்டு மேலும் பதறினாள் அஞ்சலி உடல் இப்போது நடுங்க தொடங்கியது.
அஞ்சலி செய்வதரியாது மெதுவாக முன்னே நடந்தால் அடி மீது அடிவைத்து.
புழுதி காற்று சற்று பலமாக வீசியது அங்கிருந்த சருகுகளை இவள் மீது தூவியவாறு.
அப்போது, அந்த உருவம் கை.மற்றும் தலையை வேகமாக ஆட்டி சீக்கிரம் வா என்பதை போல் செய்கை செய்தது.
அஞ்சலியின் இதயம் இப்போது துடிக்கவில்லை எகிரி குதித்தது பயத்தில் மேலும் வேர்த்து மூச்சு திணற தொடங்கியது.
அங்கிருந்து முன்னேறி செல்வதா இல்லை பின்னேடுத்து ஒடுவதா என்று அவளுக்குள் தயக்கம்.
அஞ்சலி யோசித்து நின்ற வேலையில் மீண்டும் சருகுகளை அல்லி அவள் முகத்தில் வீசியவாறு ஒரு பலத்த காற்று.
அப்போது அந்த உருவத்தின் அருகில் இருந்த பனை மரத்தில் இருந்து ஒரு பனை மட்டை உதிர்ந்து கீழே வீழ்ந்து நேராக அந்த உருவத்தின் தலையில் குத்தி நின்றது.
அந்த காட்சியை கண்டு மேலும் மிரண்டால் அஞ்சலி .
பனை ஒலை நம் மீது லேசாக உரசி சென்றாலே அதில் உள்ள மூட்கள் கீறி வலி தாங்க முடியாது.
அப்படி இருக்க ஒரு ஓலை தலையில் குத்தி நின்றும் வலிக்கவில்லை என்றாள் அந்த உருவத்தை என்ன என்று நினைப்பது
இப்படி அசராமல் நின்றபடியே நம்மை அழைக்கிறதே என்று பயத்தில் மேலும் வெடு வெடுத்து போனால் பின் திரும்பி ஓட்டம் எடுக்கலாம் என்ற நேரத்தில் பின்னிருந்து ஒரு ஓசை அவளை நெருங்கிய வாறே ஜல்ஜல் என்று .
ஆஹா பின்னாடியும் நம்மை ஏதோ சுத்து போடுதே தெரியாம இன்னைக்கு தனியா வந்து மாட்டிக்குனமோ இரவு ஏழு மணிக்கல்லாமா இப்படி பேய்கள் நடமாடும் இது தெரியாம போச்சே என்று யோசிக்கும் நேரத்தில்
அந்த ஜல் ஜல் ஓசை அவளின் அருகில் வந்து நின்று ஏய் பெண்ணே ஏன் அப்படியே நிக்குற வா சீக்கிரம் என்று ஒரு ஆணின் குரல்
அவள் குரல் வந்த திசையை அறியாமல் யார்ரா அது கூப்பிடுறது முன்னாடி நிக்குறவனா இல்லை பின்னாடி வந்தவனா என்று மிரண்டு நின்றாள் அப்போது மீண்டும் அதே குரல் .
ஓ பெண்ணே இங்க திரும்பி பாரு அங்க எதை பார்த்து அப்படி பயந்து நிக்குற வா வந்து மாட்டு வண்டியில ஏறு நான் வீட்டில் விடுகிறேன் இருட்ல நிக்குறது யாருனு கூட தெரியலை ஓ கரைக்கு கீழ பாருமா அப்படியே நிக்காத என்று .
அப்போது தான் அஞ்சலி தன்னருகே கரையின் கீழ் மாட்டு வண்டி நிற்பதை பார்த்தாள்.
அது அவள் வீட்டினருகே உள்ளே சுந்தரம் தாத்தாவின் மாட்டு வண்டி .
தாத்தா என்று அலறிய படியே வண்டியின் அருகே வந்து நின்று
அங்க யாரோ ஜடா முடியோட நிற்குறாங்க தலையில பனை மட்டை விழுந்து குத்தி நிக்குது அப்பவும் அதை
பொருட்படுத்தாம கையில கத்திய வைச்சிட்டு என்னை வா வா னு செய்கை காட்டிகிட்டு பயமா இருக்கு அதான் அப்படியே நின்னுட்டேன் என்றாள்.
உடனே சுந்தரம் தன் மாட்டு வண்டியில் இருந்த லேந்தர் விலக்கை எடுத்து அவள் காட்டிய திசை யாக பார்த்து நம்ம ஊருல ஜடா முடியோட எவனுமில்லையே யாரவன் என்று சொல்லி கொண்டே பார்த்தார் .
அங்கு இருந்தது ஒரு வேலிகத்தான் மரம் தான் மனித உருவம் போல.
அடி பேடி பெண்ணே அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் போல இந்த மரத்தை இருட்டுல பாத்துட்டு பயந்திட்டிருக்கியே என்று கூறிக்கொண்டே தன் மாட்டு வண்டியை அங்கிருந்து கிளப்பினார் .
இப்படி தான் நாமும் பிறர் கூறிய தவறான கதைகளை மட்டும் மனதில் வைத்து கொண்டு எல்லாவற்றிற்கும் பயந்தே வாழ்கிறோம்