விடுதலை நாள் வேட்கை

நாற்பத்தேழில் சுதந்திரம் வென்று
வேட்கை கொண்டோம் பல

எழுபத்தேழு ஆண்டு ஆயிற்று
எழுந்து நிற்கிறோம் இமயமாய்
வரலாற்றில்

ஆயினும் தவழ்ந்து கொண்டுதான்
இருக்கிறோம் தரணியில் இன்னும் காலத்தின் பிடியில்

என்னதான் தவழ்ந்தாலும் எழுந்தாலும் தளராது நம்மன உறுதி

அதை இந்தியா என்னும் ஒற்றை வார்த்தை வேராக நின்று நீர் பாய்ச்சுகையில்

பாயும் புலி ஆக இந்தியா( தேசிய விலங்கு)
சீறும் சிங்கம் ஆக இந்தியா ( அசோக சக்கரம் நான்முகம்)
பறக்கும் மஞ்ஞை ( மயில்)ஆக இந்தியா ( தேசிய பறவை)

தழைத்து ஓங்கும் ஆலம் ஆக இந்தியா ( தேசிய மரம்)

என்றும் தரணியில் ...

பாரத கண்டம் பழம்பெரும் நாடு என்ற பாரதியின் கூற்றுக்கு ஏற்ப.

எழுதியவர் : பாளை பாண்டி (15-Aug-24, 5:38 am)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 83

மேலே