பெம்மான்தந் தான்பிறவிப் பேறு - இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்

இரவோ(டு) இரவாக வாழ்க்கையில் வெற்றி
வருவதில்லை; ஆர்வம் குறிக்கோள் - இரண்டும்
இணைந்து தொடர்முயற்சி மேற்கொண்டால் எங்கும்
துணையாய் வரும்ஒளிம யம்! 1

இரவோ(டு) இரவாக வாழ்க்கையில் வெற்றி
வருவதில்லை; ஆர்வம் குறிக்கோள் - இரண்டும்
இணைந்து தொடர்முயற்சி மேற்கொண்டால் எங்கும்
துணையாய் வருமே ஒளி! 2

தன்னம்பிக் கைவெற்றிக் கேசாவி யாய்ஆகும்
என்றும் அவசர எண்ணமும் - நன்றாம்
முடிவினை எட்டாதே; உன்குறையை நேர்செய்
கிடைக்குமே வெற்றியப்போ து! 3

தன்னம்பிக் கைவெற்றிக் கேதிறவு கோலாகும்
என்றும் அவசர எண்ணமும் - நன்றாம்
முடிவினை எட்டாதே; உன்குறையை நேர்செய்
கிடைக்குமே வெற்றியப்போ து! 3a

முயற்சி திருவினை யாக்கும் அதனால்
செயும்உன் அடுத்த முயற்சி - பெயும்வெற்றி;
உன்பாதை என்றுமது எப்பொழுதும் ஒன்றல்ல;
உன்கொள்கை ஒன்றே குறி! 4

தொல்லைகள் என்றும் துவளவே வைக்குமன்றோ!
ஒல்லையில் உன்கொள்கை ஒன்றாய்வை - எல்லையிலா
நம்மிறைவன் ஆசி இயக்கும் உலகையே;
பெம்மான்தந் தான்பிறவிப் பேறு! 5

ஆதாரம்:Sonnet: For Success In Life - Poem by Dr John Celes dated 20.05.2015

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-May-15, 9:58 pm)
பார்வை : 85

மேலே