மானம் கெட்டவர்க்கே மரியாதை அதிகம்

மானம் கெட்டவர்க்கே
மரியாதை அதிகம்
மனச்சாட்சி கொன்றவர்க்கே
பொருட்ச்செல்வம் குவியும்

குருட்டுப்பூனை தகுந்த
விட்டத்தில் சரியாய் பாயும்
இவ்வித நியதி யாவும்
தற்கால அரசியலில் செல்லும்

ஏனென்று கேட்கவேண்டியோர்
பிச்சையெடுக்க,
வாக்குக்கு நோட்டுக்கொடுத்து
எகத்தாள கும்மாளமிடுவோர்
அரியணையேற.

எதுவும் மாறும்
எதுவும் மாயமாகும்
யாவும் மந்திரமாகும்

சட்டத்தை வளைத்தோர்
ஆர்ப்பாட்டம் ஆட
சட்டத்தை மதிப்போர்
அடக்குமுறையில் சாக
நீதியென்பது நிதி ஈரத்தில்
நீர்த்துப்போனதோ ?

செருப்பை கவ்விய நாய்கள
பொறுப்பை சுமந்து ஆளலாம்
நாளை பொறுப்பேற்று ஆளலாம்.

நெருப்பில் வீழ்ந்த ஈசல்களாய்
வெறுப்பில் வேகும் குடிமகன்கள்
கொழுப்பேறிய வெறியர்களிடம்
வாலாட்டாலாம் நாளைய
தேசத்தில் வாலாட்டலாம்.

சுயமரியாதையாம் சுயமாம்
தன்மானமாம் கெளவரமாம்
இவையன எதுவும் தீங்கென்று
பழகிக்கொள்வீர் மாக்களே
என் தேசத்து மாக்களே

மானங்கெட்டால் தானே
வாழ முடியும்.
மரியாதை போனால்தானே
செல்வம் சேரும்.


மாறுங்கள் மாறுங்கள்
சில கட்சித் தலைவர்கள் யாவரும்
மானங்கெட்டவர்களே
மரியாதை இழந்தவர்களே
தலைவன் வழியே
தொண்டன் வழியென்று
நாசாமாய் போங்கள்.

விழியிருக்கலாம்
விழித்திட வேண்டாம் தானே. ?
விழிப்புணர்வு கொடுக்கும்
எழுத்தாளர்களின் எழுத்துகளை
குப்பையில் வீசி
மானங்கெட்டே வாழுங்கள்.

இந்த நாடும்
நாட்டு மக்களும்.

*********
எப்படியோ.
போகட்டும் போகட்டும்

எனக்கென்ன.?
இக்கவிதைக்கு ஒரு பாராட்டு போதும்
நான் வாழ்ந்துவிடுவேன்
இருக்கும் சுயத்தோடு !


-வியன்

எழுதியவர் : வியன் (20-May-15, 11:49 pm)
பார்வை : 147

மேலே