Dr.V.K.Kanniappan- கருத்துகள்

சிந்தியல் வெண்பா இனிது.

இருகரையே பாவின் இலக்கணம் யாப்பினில்
ஓடையாய் சொல்பொருளில் ஓட அதற்கழ(கு)
இன்றேல் வெறும்தரை யே!

சீர்களை இவ்வாறு பிரித்தால் நன்று.
பொழிப்பு மோனை சிறப்பு.

குறள் வெண்பா

கருத்திற்கு நன்றி கவின்சார லன்,நீர்
உரைக்குங் கவிதை உயர்வு.

- வ.க.கன்னியப்பன்

இன்னிசை வெண்பா

பழமுதிர்ச் சோலைப் பழம்நீ யிருக்க
அழகுமலர்த் தோட்டத்தே ஆலவட்டஞ் சுற்றி
பழகுதமிழ்ச் சொல்லிலுனைப் பாட வருவேன்
குழலீநீ கொஞ்சு குளிர்ந்து!

- வ.க.கன்னியப்பன்

நேரிசை வெண்பா

எதுகையில்லை மோனையில்லை என்ன கவிதை?
புதுக்கவிதை என்றாலும் போற்றும் - எதுகையின்றி
மோனையின்றி உன்கவிதை முத்தாய் அமைந்திடுமோ?
பானைவயிற் றோன்சொல் பதில்!

- வ.க.கன்னியப்பன்

நான்கு வருடங்களுக்கு முன் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை; இன்றுதான் முழுதும் வாசித்தேன். நன்று.

அருள் + நனி = அருணனி; அருளை மிகவுங் காட்டி மறைந்தான் என்ற பொருளில் வெண்பா அமைந்திருக்கிறது. 'தரும தீபிகை என்று 100 அதிகாரங்களில் 1000 வெண்பா பாடியிருப்பவர் கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார் என்ற பெருந்தமிழ்ப் புலவர். மதுரை மேலமாசி வீதியில் வாழ்ந்து 81
வயதில் 1967 ல் மறைந்தார்.

அவர் பாடலை நாம் மாற்றவோ, திருத்தவோ முடியாது.

பாடல்கள் மூன்றும் பொருளுடைத்து; அருமை.

மா மா காய் அரையடிக்கு அமைப்பில் அமைந்த அறுசீர் விருத்தம் என்றும் குறிப்பிட்டால் கற்பவர்க்கு எளிதாகும் என்று எண்ணுகிறேன்.

ஆட்டம் அடங்கி விடுமுன்னே
ஐந்த டக்கி வெல்வோமே !!

முத்தாய்ப்பான ஈற்றடியை விட்டுட்டு விட்டீர்களே, சத்தியமூர்த்தி.

புன்னகை கொண்டுநாம் போற்றிடும் நட்பினில்
பின்னாளில் இல்லை பிரிவு! - வ.க.கன்னியப்பன்

குறட்பா நன்று, டாக்டர் .

1, 3 ஆம் சீரில் மோனை யமைந்தால் இன்னும் சிறக்கும்.
முயன்றால் உங்களால் முடியும்.

ஒருவிகற்பக் குறள் வெண்பா

புன்னகை கொண்டுநாம் போற்றிடும் நட்பினில்
பின்னடை(வு) இல்லை புகல்!

நல்லதோர் நண்பனை நாடியே தேர்ந்தெடுத்தால்
தொல்லையில்லை என்றே துணி!

- வ.க.கன்னியப்பன்

அறுசீர் விருத்தம் மூன்றும் அருமை.

நேரிசை வெண்பா

மண்ணின் எழில்மிகு மா,ரதி ஏந்திழையாள்
விண்ணின் உலாவரும் வெண்ணிலவின் - தண்குளிர்ச்சி
மீன்போன்ற கண்வழியே மென்காதல் தந்திடுவாள்;
தேன்போன்ற தித்திப்பாம் தேறு!

- வ.க.கன்னியப்பன்

ஒவ்வொரு அடியிலும் பொழிப்பு மோனை அமைந்தால் நன்று.

ஒரு விகற்ப நேரிசை வெண்பா

கஞ்சமலர் ஒத்த கமலமுகப் பெண்ணவள்
தஞ்சமென என்முன்னே தான்தோன்றி - விஞ்சுகுளிர்க்
கெஞ்சும் முகத்தவளாய்க் கேளெனவே என்னுடன்
நெஞ்சில் கலந்தாள் நிசம்!

- வ.க.கன்னியப்பன்

நேரிசை வெண்பா

மண்ணின் எழில்மிகு மா,ரதி ஏந்திழையாள்
விண்ணின் உலாவரும் வெண்ணிலவின் - தண்குளிர்ச்சி
மீன்போன்ற கண்வழியே மேதினியில் தந்திடுவாள்;
தேன்போன்ற தித்திப்பாம் தேறு!

- வ.க.கன்னியப்பன்

தேறு-. 1. Clearness;தெளிவு. 2. Certainty; நிச்சயம். (சூடா) .ஏந்திசைச் செப்பலோசையுடைய சந்த வெண்பாக்கள் அத்தனையும் இனிமை.

இருவிகற்ப நேரிசை வெண்பா

வெள்ளிக் கிழமை விடியலில் பெண்ணேநீ
ஒள்ளிய பன்னீரொ(டு) ஒப்பற்ற – தெள்ளிய
புட்பங்கள் கூந்தலில் போட்டுளாய்! வாசமிகு
நுட்பமென்ன சொல்வாய் நுனித்து

- வ.க.கன்னியப்பன்

வாசிப்பிற்கும், கருத்திற்கும் நன்றி.

அருமையான கருத்தமைந்த உண்மை நிலையைக் கூறும் செய்தி! வாழ்த்துகள்.


Dr.V.K.Kanniappan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே