அழைக்கிறாய் கண்ணாலென்னை அந்திவாசலுக்கு
அழைக்கிறாய்கண் ணாலென்னை அந்திவாச லக்கு
மழைபோல் பொழிகிறாய் மௌனமாய் நெஞ்சில்
நனைகிறேன் நித்தம் நிலாமலர் போல்நின்
நினைவுச்சா ரல்தன்னில் நான்
-----இருவிகற்ப இன்னிசை வெண்பா
அடி எதுகை ---அழை மழை நனை நினை
சீர் மோனை --- 1 3 ஆம் சீரில் ---அ அ ம மௌ ந நி நி நா