எண்ணங்கள்

எண்ணங்கள்

என் எண்ணங்கள்
எப்பொழுதும்
பிறந்த கன்று குட்டியாய்
துள்ளி குதித்து
தாறுமாய் ஓடி கொண்டே
இருக்கிறது

இழுத்து பிடித்து
கட்டி வைக்க
இதயமோ மூளையோ
படாத பாடு
பட வேண்டியிருக்கிறது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (9-Oct-24, 8:32 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : ennangal
பார்வை : 65

மேலே