பெருகியோடும் ஓடையில் ஒருமுறைநீ நின்றாய்

பெருகியோடும் ஓடையில் ஒருமுறைநீ நின்றாய்
பருகிட நீரை இருகரத்தால் குனிந்தெடுக்க
ஒருமீன்நீ ரில்நீந்த அருந்தாமல் விட்டுவிட்ட
கருணையை என்சொல்வேன் கருவிழிக் கயலெழிலே

---ஒரே அடி எதுகையுடன் சீர் எதுகைக்கு மட்டும்
முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட
அடிதோறும் பல வாய்ப்பாடு பயின்றுவரும் கலிவிருத்தம்

அடி எதுகை--பெரு பரு ஒரு கரு

சீர் எதுகை 1 3 ஆம் சீரில் ---பெரு ஒரு பரு இரு ஒரு அரு கரு கரு

பெருகியோடும் ஓடையிலே ஒருமுறைநீ நின்றிருந்தாய்
பருகிடவே நீரினைநீ இருகரத்தால் குனிந்தெடுக்க
ஒருமீன்நீ ரில்நீந்த அருந்தாமல் விட்டுவிட்ட
கருணையைநான் என்சொல்வேன் கருவிழிப்பூங் கயலெழிலே

----காய் காய் காய் காய் எனும் ஒரே வாய்ப்பாடு அடிதோறும் அமைந்த
ஒரே அடி எதுகையும் கொண்ட கலிவிருத்தம்
காய்முன் நிரை நிற்கும் கலித்தளை மிகுந்து இருப்பதால்
இந்தப் பாவினம் தரவு கொச்சகக் கலிப்பாவிலும் சேரும்


பெருகியோடும் ஓடையிலே பெண்ணேநீ நின்றிருந்தாய்
பருகிடவே நீரினைநீ கைகளிலே குனிந்தெடுக்க
ஒருமீன்நீ ரில்நீந்த ஓடையினில் அதைவிட்ட
கருணையைநான் என்சொல்வேன் கருவிழிப்பூங் கயலெழிலே

---ஒரே அடியெதுகை பெரு பரு ஒரு கரு

1 3 ஆம் சீரில் சீர் மோனை --- பெ பெ ப கை ஒ ஓ க க
காய் காய் காய் காய் எனும் அடிதோறும் ஒரே
வாய்ப்பாடு பயின்று வந்த கலிவிருத்தம்

பெருகியோடும் ஓடையிலே பெண்ணேநீ நின்றிருந்தாய்
பருகிடவே நீரினைநீ கைகளிலே குனிந்தெடுக்க
ஒருமீன்நீ ரில்நீந்த ஓடையினில் அதைவிட்ட
கருணையைநான் என்சொல்வேன் கருவிழிப்பூங் கயலெழிலே

----காய் முன் நேர் வரும் கலித்தளை மிகுந்து வந்ததால்
தரவு கொச்சகக் கலிப்பா என்றும் சொல்லலாம்

எழுதியவர் : கவின் சாரலன் (9-Oct-24, 9:31 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 4

மேலே