பாறை

கூர்மையான கடப்பாரையால்
ஓங்கி குத்திய போதும்
சற்றும் நுழைவதற்கு
அசைந்து இடம் கொடுக்காத
*பாறை*

தனக்குள் முட்டி மோதி
முளைத்து வர துடிக்கும்
விதைக்கு மட்டும்
இசைந்து வெளியே வருவதற்கு
*பாறை*
இடம் கொடுத்தது எப்படியென்று
சிந்தித்தேன்

அன்பென்னும் ஆயுதம் கொண்டு
தாக்கினால்
*பாறை* பணிந்து வழிவிடும்
என்பதை புரிந்து கொண்டேன்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (9-Oct-24, 7:35 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : paarai
பார்வை : 118

மேலே