மழை

மழை..!
10 / 10 / 2024

மேக கன்னி
சோக கன்னியாய்
கருப்பாடைத் தரித்து
தொலைந்த காதலனை
வான வீதியில்
தேடி அலைகிறாள்.
ஆதரவாய் தென்றலும்
கனிவாய்த் தொட்டவுடன்
ஓவென இடியாய் கதறி
கண்ணீர் மழையாய்
கரைந்தே மண்ணில்
விழுந்து..கொட்டித்
தீர்த்து விட்டாள்.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (10-Oct-24, 8:56 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : mazhai
பார்வை : 174

மேலே