பேனா எழுதுது பெண்ணேநின் பேரழகை

நானா எழுதுகிறேன் நின்னை நிலவெழிலே
பேனா எழுதுது பெண்ணேநின் பேரழகை
மானே மயிலினி மௌனமென் புன்னகையே
தேனாகச் சொட்டுது செந்தமிழ்ச் சொல்லமுது
நானா எழுதுகிறேன் நற்றமிழ் பூங்கவிதை
பேனாவில் பாயும் புனல்

----ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

எதுகை நானா பேனா மானே தேனா நானா பேனா

மோனா 1 3 ஆம் சீரில் ந நீ பே பெ ம மெ தே செ நா ந பெ பு

எழுதியவர் : கவின் சாரலன் (11-Apr-24, 10:06 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 46

மேலே