அவள் என் உயிர்

அவள் என் உயிர்.

அழகிய
கறுப்பும் வெள்ளையும்
அதில்‌ அவளும் நானும்
அவள் கரங்கள் என் கழுத்தில்

அழகிய
சூரிய காந்தி
அதில் அவள் முகம்
புன்னகைத்து நின்றது.

அழகிய ‌நீர் ஓடை
அதனுள்ளும்
அவள் பிம்பம்
கை அசைத்து நின்றது

அமைதி இழந்து
கடல் கரை சென்றேன்
அங்கும் அவள் இருந்தாள்
அலை அலையாக வந்து
என் கால்களை
ஓ என சத்தமிட்டே
தழுவி சென்றாள்

அவள் மறைந்து
பல வருடம்
அவள் நினைவுகள்
இன்றும் எனக்கு
இளம் வருடம்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (11-Apr-24, 9:43 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : aval en uyir
பார்வை : 105

மேலே