எந்தன் சிலையெங்கே தென்றலே தேடு

மலர்களெல் லாம்மகிழ்ந்து மாலையில் பூக்க
உலவவந்த தென்றல் உவந்து தழுவ
நிலவும் வருகைதந்து நட்பில் சிரிக்க
அலைபாயும் கூந்தல் அழகுமேனி எந்தன்
சிலையெங்கே தென்றலே தேடு

---ஒரு விகற்ப பஃறொடை வெண்பா ( 5 அடியிலிருந்து 12 அடிவரை இவ்வெண்பா அளவு)

எதுகைகள் : மலர் உல நில அலை சிலை
மோனை 1 ஆம் 3 ஆம் சீரில் ம மா உ உ நி ந அ அ சி தே

எழுதியவர் : கவின் சாரலன் (10-Apr-24, 6:33 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே