பங்குனியில் பரிசம் போடவ
பங்குனியில் பரிசம் போடவ
கத்தரிப் பூவாட்டம்
கவர்ந்ததடியொன் முகவாட்டம்/
அத்திப்பழமாட்டும் சுவைக்க
அழைக்குதடியொன் உதடுமே/
கரும்புக்குள்ள இனிப்பாக
கலந்திடுவேன் ராசத்தியொன்/
இரும்பான இதயத்துள்
இலகுவாகப் புகுந்தே/
விளைந்தக் கதிராட்டம்
விழுந்தெனடி உனையாட்டம்/
களைந்திடும் மேகமாட்டும்
கரைகிறேனே நினைவாலே/
கால்பட்ட முள்ளாக
காயமாக்கி வலிக்காது/
இல்லறம் பிணைவோம்
இனியதொரு திங்களிலே/
சங்கமிக்கும் நதியாக
சமுத்திரமாக நீடுவாழ/
பங்குனியும் வந்திடவே
பரிசம் போடவாரேன்/
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்