அலையெலாம்நீ நீராடும் போதில் ஆனந்த ராகங்கள் பாடுமோ

கலைந்தாடும் கூந்தலில் தென்றல் மேக ஓவியம் வரையுதோ
சிலைபோல் மேனியில் செந்தாமரை செந்தமிழ் கவிதை எழுதுதோ
அலையெலாம்நீ நீராடும் போதில் ஆனந்த ராகங்கள் பாடுமோ
சிலையில் உன்னை வடிக்க கிரேக்க வெண்பளிங்கு எடுத்துவரவோ

எழுதியவர் : கவின் சாரலன் (21-Sep-24, 9:51 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 44

மேலே