தமிழணங்கு

கட்டளைக் கலித்துறை


மன்னர் இறைவர் அறிஞர் அனையர் மகிழ்ந்திடுவர்
குன்றா இளமை குமரித் தமிழுன் குணத்தினையே
மன்றம் அதிரப் புலவர் புகழ்ந்து மகிழ்ந்திடுவர்
என்றும் உலகில் எழிலாய் வளரும் எனதுயிரே

எழுதியவர் : உதய நிலவன் (மரு..சந்திரமௌலி) (18-Mar-24, 5:54 pm)
சேர்த்தது : Dr B Chandramouli
பார்வை : 46

மேலே