Dr B Chandramouli - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Dr B Chandramouli |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 17-Sep-2020 |
பார்த்தவர்கள் | : 100 |
புள்ளி | : 39 |
நான் அமெரிக்காவில் 35 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து அங்கு மருத்துவராகப் பணியாற்றி விட்டு ஒய்வு பெற்றவன். சிகாகோ தமிழ்ச் சங்கத்தில் பல ஆண்டுகள் பணி புரிந்தவன். தமிழில் அதிக ஆர்வமுண்டு. இப்போது தமிழ்-ஆங்கில மொழிபெயர்ர்ப்புகளில் ஈடுபட்டுள்ளேன் (ஜாக் லண்டன் எழுதிய 'வைட் ஃபேங்' என்ற நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.). அவ்வப்போது கவிதைகளும் எழுதுவதுண்டு. இப்போதுதான் மரபுக் கவிதை எழுத முயற்சி செய்கிறேன்!!
பஃறொடை வெண்பா.
இயற்கை வளம் காப்போம்
------------------------------------
இயற்கை வளமதை ஏனோ அழித்தாய்
செயற்கைப் பொருளதனை வீதியிலே வீசுகிறாய்
காடெலாம ழித்தே மரமெலாம் தீயாக்கி
நாடெலாம் பல்பயிரும் நாம்வாழ நட்டதனால்
கார்மழை தந்த கருமேகம் இல்லாமல்
பார்முழு தும்வரண்டு ஏரிகுளம் வற்றி
புவிமகளும் வாடுகின்றா ளின்று
நேரிசை வெண்பா
---------
இயற்கை வளமதனை யின்று தொலைத்தே
செயற்கைப் பொருளதனைச் செய்யீர் நயமுடன்
நல்லு லகம்வா ழவழிகாட்டும் என்பாக்கள்
எல்லா உயிர்க்கும் சிறப்பு
கலிவிருத்தம்
காய்-காய்-காய்-காய்
விண்ணின்நற் கொடையெனவே பொழிகின்ற அமுதமது
மண்ணில்நம் வாழ்வுக்கு உயிர்நீரு மதுவேதான்
தண்ணீர்க்கே பஞ்சமெனப் படுகின்ற பாடுகண்டே
கண்ணீரும் வந்திடுதே நன்நீரைச் சேமிப்போம் !
கலிவிருத்தம்
(காய் காய் மா காய்)
முதுமைக்கு முண்டன்றோ காதல் அந்நாளில்
பதுமைபோலி ருந்தவளின் வடிவு குலைந்தாலும்
பருவம்போ நாலுமவள் அன்பு குறையாதே
உருவமது மாறினாலும் வளரும் காதலிதே
தெருவெங்கும் காளைகளாம் பலவண்ணக் கொம்புகளாம்
வருகையிலே அசைந்தாடும் கழுத்துமணி ஓசைகளாம்
துள்ளுமிளம் கன்றுகளைத் பசுஞ்சாணிப் பாத்தியதில்
தள்ளிவிட்டுக் கலைத்திடுவார்; பசுமாட்டைக் குளிப்பாட்டி
பொட்டிட்டுப் பொங்கலிட்டு மரியாதை செய்திடுவார்;
அக்காலம் கண்டகாட்சி கண்ணிலே நிக்குதய்யா!!
இக்காலம் காண்பதற்கு நம்நாட்டில் நல்லதோர்
குக்கிராமம் இல்லாமல் போய்விடுமோ? நாமும்தான்
தேடித்தான் பார்த்திடுவோம் இன்றே!!
அந்நாளில் பல செந்நாப் புலவர்
பேனாவின்றிப் பென்சிலுமின்றி
காகிதமென்றொரு வெண்பொருளின்றி
ஓலையும் சீலையும் பலவும் கொண்டு
சிலம்பின் காதையும் சீதையின் காதையும்
போரின் கதையும் காதலின் கதையும்
வாழ்வின் முறையும் இன்னும் பலவும்
வெண்பா கலிப்பா பலபாக்கொண்டு
சந்தம் மிகுந்து பொருளும் மிகுந்து
இன்றும் படிக்க இனிதே வடித்தனர்
இன்றைய நாளில் நாமும் பலவித
மென்பொருள் கொண்டு பாவடித்திடினும்
மரபுக் கவிதை மறந்தே போனதோ?
அசையும் சீரும் தளையும் தொடையும்
இசையுடன் வடிப்போர் இன்னும் உண்டோ?
உரைநடையதனை நான்காய் மடித்தால்
கவிதையாகுமோ காண்பீர் நன்றே !
(இதுவும் மரபுக் கவிதையன்று)