சீறாப்புராணம் - விருத்தங்களில் முதல்சீர்

முதற்பாகம்
விலாதத்துக் காண்டம்
காப்பு
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

திருவுருவா யுணருருவா யறிவினொடு
..தெளிவிடத்துஞ் சிந்தி யாத
அருவுருவா யுருவுருவா யகம்புறமுந்
..தன்னியலா வடங்கா வின்பத்
தொருவுருவா யின்மையினி லுண்மையினைத்
..தோற்றுவிக்கு மொளியா யாவு
மருவுருவாய் வளர்காவன் முதலவனைப்
..பணிந்துள்ளி வாழ்த்து வாமே!

குறிப்பு:

இப்பாடலில் அமைந்துள்ள முதல்சீரைப் பாருங்கள்.

நான்கடிகளிலும் கருவிளங்காய் முதல் சீராய் வருகிறது.

இன்று விருத்தங்கள் எழுதும் பலர் எதுகை அமைந்தால் போதுமென்று,

தேமாங்காய், கூவிளங்காய் என்றும்,

புளிமாங்காய், கருவிளங்காய் என்றும் கலந்து கட்டி எழுதித் திறமையைக் காட்டுகிறார்கள்; என்னென்பேன்?

எழுதியவர் : சீறாப்புராணம் (17-Mar-24, 8:05 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே