ஒரு பார்வை வீசி போவாயா
பார்வை வீசி போவாயா
ஒரு பார்வை வீசி போவாயா
கரை தொடும் நிலவே
கலையாத கனவே
பேசும் பெண் பூவே
வாடினேன் நானடி...
உன்னால் தானடி...
பார்வை வீசி போவாயா
ஒரு பார்வை வீசி போவாயா
அடித்து போகும் வெள்ளத்தில்
மிதந்து போகும் இலை போல்
நானிருந்தேனடி திரிந்தேனடி
சூடம் தாங்கும் வெற்றிலை போல்
மதிப்பாய் மாறி போனெண்டி உன்னால
பறந்தேன் தன்னால உன் கண்ணால
வாழ்நாளின் மிச்ச நாளை
உச்ச நாளாய் மாற்றுவாயா
தாலாட்டு எனக்கும் பாடி
தாய் போல் என்னை தேற்றுவாயா

