எழுத மறந்த கவிதை

கண்கள் பார்க்கும் ஒவ்வொன்றும்..
கவிதையாய் மனதில் உருவாகும்..
ஏட்டில் வடிக்க என் ஆசையும்..
நேரம் வருமென காத்திருக்கும்..
காலம் நேரத்தை கடத்தி விட..
வாழும் என் உணர்வுடனே..
மனதில் நான் வடித்து..
ஏட்டில் எழுத மறந்த கவிதையே..

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (12-Dec-25, 10:07 am)
சேர்த்தது : meenatholkappian
பார்வை : 30

மேலே