தமிழுக்கு ஒரு வேண்டுகோள்
எத்தனை முறை எழுதினாலும்..
நழுவிச் செல்லும் வார்த்தைகள்..
களவு போன நினைவுகளால்..
தொலைந்து போன என் கவிதைகள்..
விழி மூடி உறங்கும் இரவு நேரம்,
மறந்த கவிதை மனதுள் தோன்றும்..
கனவில் நான் மீண்டும் எழுதிட,
களவானதோ விடியலில் மீண்டும் மறந்திட!
தமிழே! தமிழே! தித்திக்கும் தமிழே,
தொலைந்த என் கவியை தேடி தருவாயே..
வேண்டி எழுதினேன் மீண்டும் ஏட்டில்..
விரைந்து வருவாய் கவியே தேன் தமிழில்!!

