தோழிக்காக ஒரு கவிதை
நானும் தோழியும் பேசுகையில்
அவள்.....
எல்லாம் கவியாக்கி
என்னை அசர வைத்தாய்
என்னை பற்றி
ஒரு கவிதை சொல் என்றாள்
புன் சிரிப்பை உதிர்த்து விட்டு
சொல்கிறேன் என்றேன் சில நொடி
மௌனமாய் நின்றேன் --
அவள்.....
கவிதை வரவில்லையா
நான் ரசிக்கும் பொருளில்லையா
என்று கேட்டு சிரித்தாள்
கவிதைக்கு கவிதை சொல்ல
எப்படி நான் தொடங்க
என்று யோசித்தேன்
வார்த்தையை யாசித்தேன்
இயற்கை ஒரு கவிதை
நிலவும் ஒரு கவிதை
காதலும் ஒரு கவிதை
பெண்ணும் ஒரு கவிதை
மேற்சொன்னவை எல்லாம்
ஒவ்வொன்றும் ஒரு அழகு
என் தோழி நீ மட்டும்
எல்லாமே அழகு...
உன்னை பற்றி என்றால்
என் கவிதைகளின் தாயகம் நீ என்பேன்
தலை முதல் பாதம் வரை
நீ நடக்கின்ற பூ என்பேன்
விரல்கள் எல்லாமே
கம்பி இல்லா வீணை என்பேன்
விழிகள் திராட்சை என்பேன்
எரியும் கோளம் என்பேன்
கம்பன் இருந்திருந்தால் உன்னை
இன்னும் வர்ணிப்பான்
எனக்கு வரவில்லை
கவிதைக்கு கவிதை சொல்ல...!
என்ன நான் செய்ய...
விட்டு விடவா கவிதை சொல்ல...?
நான் சொன்னதை அவள் கேட்டு
நிஜமாய் நகைத்து விட்டாள்
கவிதை அழகு என்றாள்
நொடியில் கவிதை சொல்ல உன்னால்
மட்டுமே முடியும் என்றாள்
நீ என் நண்பன் என்பதால் எனக்கு
பெருமை என்றாள்.....
விட்டு கொடுப்பதெல்லாம் நட்புக்கு இல்லை
என்று சொல்லாமல் சொல்லி விட்டாய்
எனக்கு நட்பின் அழகை புரியவைத்தாய்
உன் நட்பு தான் கிடைக்க என்ன தவம்
நான் செய்தேன் என்று சிரித்து நின்றேன்...!