தோழியே உன்னில் ரசித்தவை
பூவோடு பழகிய நேசம் உன்னில் தான்
நானும் கண்டேன் ஒரு பூவோடு என் நேசம்
தொடர நானும் நட்பு கொண்டேன்
தினம் ஒரு கவிதை தருமளவு
உன்னை நான் நண்பனாய் ரசிப்பேன்
நாணல் வளைவதை நான் ரசித்ததில்லை
உன் நாணத்தை நான் தினம் ரசித்தேன்
பெண் தோழி என்பதை மறந்து
தோளில் கைகொண்டு நானும் நடந்தேன்
தவறாய் நினைக்காமல் தாயாய்
பொறுத்து நின்றாய்
பிள்ளை பெறாமல் தாய்மை எப்படி கண்டாய்
பாசத்துக்கு உருவம் உண்டென்று
பருவம் அதில் காலமென்றும்
உனக்கென சோகம் பகிர்ந்திடவே
என்றும் நானிருப்பேன் சத்தியம் செய்யாமல்
சொல்வாக்கில் காத்து நின்றாய்
நானும் சாதிக்க யோசனை பல தந்து
நானும் சாதித்து அருகில் நீ இன்றி
உன்னை நான் தேட
கூடத்தில் ஒரு ஆளாய் கைதட்டி பெருமை
கொண்டாய் என் நண்பன் சாதித்தான்
என்று கூச்சல் கொண்டாய்
எப்படி ஈடு செய்வேன் உன் முயற்சியில்தான்
வெற்றி நான் கண்டேன் எனக்கு திறமை
உண்டென்று சொன்னவள் நீதானே
எந்தன் வெற்றி எல்லாம் உன் பாதத்தில்
சமர்பித்தேன் உனக்கு ஈடு இல்லை
என்ன நான் செய்ய
உன் நட்பு அழகை கண்டு
மெய்சிலிர்த்து நான் நின்றேன் ஆம்
சிலையாய் நான் நின்றேன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
