சுவை
பூத்து குலுங்கும் மரமே
காற்றோடு அசைய நீ சிரிக்கும்
சத்ததை நான் உணர்ந்தேன்
கடல் அலைகள் மோதி தென்றல்
காற்று கலக்க நீ சந்தோஷமாய்
இருப்பாய் நான் உணர்ந்தேன்
அனல் பறக்க நீ யோசிக்கும்
தருணங்கள் வார்த்தைகளை
வெளி வர உந்தன் விழி மூடா
வெற்றி பயணங்கள் கடக்க
போராடி கொண்டிருப்பதை உணர்ந்தேன்..
உன் பயணத்தில் நான் என்றும்
பார்வையாளரே..