காகிதம் தினக் கவிதை
📝📝📝📝📝📝📝📝📝📝📝
*காகிதம் தினம் இன்று*
*காகிதம் ஓர் ஆயுதம்*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
📝📝📝📝📝📝📝📝📝📝📝
#காகிதம்
மூங்கிலை
புலலாங்குழலாக்கி
வாசித்த போது
ஆனந்தம் பிறந்தது... ..|
காகிதமாக்கி
வாசித்தப் போது
அறிவு பிறந்தது.....!
எழுதாத வரை தான்
அது காகிதம்
எழுதிவிட்டால்
அதுவே ஆயுதம்.....!
ஆரம்ப காலத்தில்
எழுத்துக்களை
மண்ணில்
உட்கார வைத்ததால்
புழுதி படிந்துக் கிடந்தது...
இடைக்காலத்தில்
பனை ஓலையில்
ஊசியால் குத்தி வைத்ததால்
காயம்பட்டிருந்தது...
இறுதியாக
காகித்தில்
படுக்க வைத்தபோதுதான்
சுகமாக ஆனந்தமாக
எழுத்து வாழ்கிறது....
காதல் கடிதம் ஆகும் போது
பலரது பெட்டிக்குள்
பொக்கிஷமாகி விடுகிறது...
இருபது நாற்பது
இணையம் போது
எழுத்துக்கள் அமரும்
நோட்டு அரியணையாகிறது...
நூறு இரனூறு என்று
இணையும் போது
புத்தகம் என்னும்
கோவிலாகிறது
செய்திகளை
சுமந்து வரும்போது
நாளிதழ் ஆகிறது. ..
பென்சில் செய்யும் தவறுகளை
மன்னித்து விடுகிறது...
பேனா செய்யும் தவறுகளுகளுக்குத்
தண்டித்து விடுகிறது...
கிழிந்து விட்டால்
அதனை பொறுப்பாக
ஓட்டுவார்கள் சிலர் தான்.
பயன்படும் வரை
பயன்படுத்திவிட்டு
பயனில்லை என்றதும்
கசக்கி எறிபவர்களே பலர்....
இது மட்டும் என்ன
இந்த சுயநல உலகத்தில்
விதிவிலக்கா ?
பலர்
குப்பையில் போட்டு
பிணமாக்குவார்கள்....
சிலர் எடைக்குப் போட்டு
பணமாக்குவார்கள்...
கல்வி நிலையங்களில்
நியமிக்கப்படாத
தலைமை ஆசிரியர்......
காற்று என்ன
உன் காதலியா?
தொட்டு விட்டால்
துடியாய் துடிக்கிறாய்...
பிடிக்கவில்லை என்றால்
ரொக்கைக் கட்டிப் பறக்கிறாய்...
எழுதுகோலும்
நீயும்
கணவன் மனைவி தான்
புணரும் போது
எழுத்து குழந்தைகள்
பிறப்பதால்....
காகிதம்
இல்லாமல் போனால்
எழுத்துக்களை
வாசிக்க மட்டுமல்ல
எழுத்துகள்
*வசிக்கவும்* முடியாமல்
போய்விடும்.....!!!
காகித தின நல்வாழ்துகள்...
*கவிதை ரசிகன்*
📝📝📝📝📝📝📝📝📝📝📝