பழந்தமிழன்
குகையில்...
குடிலமைத்து
கோபுரத்தில் தவமிருந்து
ஆயக்கலை வளர்த்தவன்
பழந்தமிழன்...
மங்கைக்குத்
தங்கையென
மகத்தான பெயர் கொடுத்தவன்
பழந்தமிழன்...
இக்கால தமிழனோ...
தங்கைக்கு விலைபேசி
தங்கத்தைப் பொருளாக்கி
விபச்சார விடுதிகட்டி
விதிகள் பல கொடுக்கிறான்...!
பெண்மானம் உயிரென்றும்
தன்மான உணர்வென்றும்
கருவறை தாண்டும் முன்பே
கற்பிப்பவன்
பழந்தமிழன்...!
இக்கால தமிழனோ...
அக்காலம் மறந்து
அக்காவை மறந்து
உக்கார்ந்து சிரிக்கிறான்
உலகம் போல் அவனும்
அவன் பிறந்த
மண்ணில் தானே
நீயும் பிறந்தாய்...
அவனுடம்பில்
செங்குருதி
உன்னுடம்பில்
அது நிறம்பி
இனி...
வழிந்தோடும் வழியெங்கும்
புது வரலாறு படைக்கட்டும்.

