அவள்

அவள்...


முதன் முதலாய்
என்னைக் காதலித்தவள்.

முழுவதுமாக
நேசித்தவள்...
என்...
துயரம் துடைக்க வந்த
தூயவள்.

அழகின் அரசி
அதிசயத்தின் உச்சம்...

பெண்ணை மதிக்கவைத்த
பெரியாரின் பேத்தி.

உணவிலும்
உடையிலும்
அவளிடம் அடிபடுவதே...
எனக்கு ஆனந்தம்.

என்றும்...
என்னுடன் இருப்பாள்
என்று எண்ணையிலே.

என்னில்...
கொள்ளிவைத்து தள்ளி வைத்த
தாய்.

வந்தான் ஒருவன்...
மாலையும்,
மஞ்சல் கயிறுமாய்...

கட்டியவன் உடனிந்தும்
என்னைக் கட்டியணைத்து
கண்ணீர் வடித்தவள்.

என்...
அக்கா... தங்கைகள்.

எழுதியவர் : பா.முப்படை முருகன் (8-Feb-22, 7:03 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
Tanglish : aval
பார்வை : 3704

மேலே