சூட்டால் அணைத்தால் மோகம்
மரத்தை நெருப்பால் எரித்தால் சாம்பல்
மண்ணை நெருப்பால் எரித்தால் செங்கல்
நீரை நெருப்பால் எரித்தால் ஆவி
திரியை விளக்கால் எரித்தால் வெளிச்சம்
மணலை நெருப்பால் எரித்தால் கண்ணாடி
மண்ணால் செய்த பொருளை எரித்தால் பாத்திரம்
கதிரவன் சூட்டால் எரித்தால் மேகம்
மனிதன் சூட்டால் அணைத்தால் மோகம்
இரும்பை சூட்டால் எரித்தால் கூழ்மம்
கரும்புச்சாறை சூட்டால் எரித்தால் வெல்லம்
எல்லாம் வடிவம் பெறுவதும் பெருஞ்சூட்டாலே
எல்லாம் மறைந்து போவதும் பெருஞ்சூட்டாலே
---- நன்னாடன்.