கரோனா படுத்தி பாடம் தந்தது

2020இல் நாட்டில் நுழைந்த கரோனா என்னை 2020இல் தாக்கவில்லை!
2021இல் வடிவத்தை மாற்றி வந்த அதே கரோனா என்னை பாதிக்கவில்லை!
ஆனால் 2022இல் ஆம்ரிக்கான் என்ற புனைப்பெயரில் ஊடுருவிய கரோனா, எதிர்பாராத வகையில் என்னை தாக்கியது!
எனது பாதுகாப்பு நடவடிக்கைகளில்
பொதுவாக அஜாக்கிரதை ஏதும் இல்லை!
இருப்பினும் என்னையும் என் வாழ்க்கை துணையையும் ஒரே நேரத்தில் தாக்கி எங்கள் உடல் நலத்தை தீவிரமாக பாதித்தது இந்த தொற்றுநோய்!
அறுபது ஆண்டுகள் வாழ்க்கையில் காலம் எனக்கு கற்று தந்த பாடங்கள் பலப்பல!
இப்போது இந்த கரோனாவால் எனக்கு கிடைத்தது வாழ்க்கை சித்தாந்தம்!
உடல் நலம் மன நலம் இரண்டுமே இருந்தால் தான் அமைதி, ஆனந்தம்!
ஒரு கோணத்தில் பார்த்தால் நம் வாழ்க்கை அமைவது நம் அதிர்ஷ்டத்தை பொறுத்து தான்!
உழைப்பு படிப்பு சாமர்த்தியம் இவை இருப்பினும் அதிர்ஷ்டம் கை கொடுத்தால் தான் பலன்!
நாம் எவ்வளவு ஜாக்கிரதையுடன் விழிப்புடன் இருந்தாலும் எது நமக்கு நடக்க வேண்டுமோ அது மட்டுமே நடக்கும்!
ஒருவர் அழுவதும் தொழுவதும் அவரவர் மனநிலையை அவர் நம்பிக்கையை குறிப்பிடுகிறது!
பிரச்சனைகளை கண்டு பயம் கொள்ளாமல் துவண்டு போகாமல் நல்ல தைரியம் துணிச்சல் உள்ள ஒருவர் ஏனைய அனைத்து மனிதர்களை விட அதிக மகிழ்ச்சியுடன் வாழ்வார் என்பது என் வாழ்க்கையில் நான் கண்டு உணர்ந்த அரிய உண்மை...

ஆனந்த ராம்

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (8-Feb-22, 7:30 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 54

மேலே