பழைய துடப்பம்
பழைய துடப்பத்திற்கு தான்
தும்பும் தூசியும்
வீட்டில் எங்கு இருக்கும்
என்பது நன்கு தெரியும்...!!
ஆனால்
இதனை புரிந்து கொள்ளாமல்
புது துடப்பம் வந்தவுடன்
பலர்
பழைய துடப்பதை
வீட்டின் ஓரத்தில்
வைத்து விடுவார்கள்
சிலர்
தூக்கி வெளியே
எறிந்து விடுவார்கள்...!!
--கோவை சுபா

