இதயம் கற்க இயம்பிடு

அதிகாலை நேரம்
அதிசிரத்தையெடுத்து
அன்ன நடை நடந்து செல்ல
ஆதவனை வரவேற்கும்
ஆசை பறவைகளின் இசை கேட்டேன்!

ஊர் விழிக்கும் முன்பு
உணவு தேட செல்லும்
உற்சாக பறவைகளின் இசை கேட்டேன்!

சஷ்டி கேட்கும் முன்பு
உங்கள் சங்கீதம் கேட்டேன்!

உள்ளம் கொள்ளை கொண்ட
உலகம் சுற்றும் பறவைகளே!

உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.......

இரவெல்லாம் இணையவெளியில்
........வலம் வரும் எம் இளைஞனர்க்கு
இதயம் கற்க இயம்பிடு.....

எழுதியவர் : கலைப்பிரியை (21-Jul-18, 2:47 pm)
சேர்த்தது : kalaipiriyai
பார்வை : 236

மேலே