வெறும் பார்வை

என்னை நீ கண்டாலே
வெட்கம் வந்து நிற்குதே
உன்னை நான் கண்டாலே
இதழ் புன்னகை பூக்குதே
இது என்ன மாயமோ
வெறும் பார்வையால்
என் பசி தீருமோ?
உண்மை சொல்லடா
என்னுயிர் காதலா
இனியும் உனை பிரிந்திருப்பது
கொடுமைதானடா
என் காதல் வலி தீர
ஆறுதல் கூறுடா
உன்னை எண்ணியே
என்னுடல் இழைத்துப்போனதை
கொஞ்சம் பாருடா
விரைந்து வந்து
மூன்று முடுச்சுப்போடுடா
அதன் பின்
உன் மனம்போல் விளையாடுடா
எனதன்புக் காதலா
உனதாசையை வெளியேற்றுடா
நான் இன்பம் தரும் ஊற்றுடா
உன் தாகம் தீர
அள்ளி பருகிக்கொள்ளுடா
என்னை வெல்லுடா
மணமாலை தொடுத்து வந்து
உன் கையால் எடுத்து தந்து
தேன் நிலவுக்கு எனை
அழைத்து செல்வதென்று...
காண்பாய் பேரின்பம் அன்று!