காதலர்கள்
இரவும் பகலும் இடமாறிச்சென்றாலும்,
நம்
இதயமிரண்டும் தடுமாறிநின்றாலும்,
சூரியக்கதிர்கள் பனி மாரிப்பொழிந்தாலும்,
சந்திர மதியது கனல்வீசிச்சென்றாலும்,
கங்கையும் காவிரியும் கானல்நீராயானாலும்,
அம்மாவாசையன்று முழு நிலவு வந்தாலும்,
பௌர்ணமி இரவில் பால்நிலா தோற்றாலும்..
நான்!!
நீ !!
என்ற நிமிடங்கள்தாண்டி,
நாம்மென்று
வாழ்ந்து
நாம்மறைந்தாலும் ,,
கிரகங்கள் தாண்டி,
யுகங்கள் மீண்டு,
உருவங்கள் மாறி
வந்தாலும்....
என்றுமே நாம் "காதலர்களே"!!