ஒற்றுமையின்றி போனால்
புரிதலும் விட்டுக்
கொடுத்தலும்
இன்றி வழக்காடும்
கணவன் மனைவி
சண்டையாய்
காவிரி பிரச்சனை
சேர்த்துவைக்க
முயற்சிக்காது
கலகம் செய்யும்
உறவுகளாய்
சில சுயநலமிகள்
நிர்கதியாய் நிற்கும்
பிள்ளைகளாய்
விவசாயிகள்
அரசியல்
ஆதயத்திற்காக
ஊமையாய் நிற்கும்
ஆட்சியாளர்கள்
வளரும் இந்தியா!
கண்டம் விட்டு
கண்டம் பாயும்
ஏவுகணை
கைய்யில் இருக்கு
காவிரி நீர்
தடையின்றி பாய
ஏதேனும்
வழியிருக்கா?
வளருமா இந்தியா?
ஒற்றுமையின்றி
போனால்?
நா.சே..,