எப்படி மறப்பேன்
![](https://eluthu.com/images/loading.gif)
எப்படி மறப்பேன்..
உந்தன் பூ மேனியை
முதன் முதலில்
என் கரங்களால் அள்ளிக்கொண்டதை..
உந்தன் ஒவ்வொரு
பிறந்தநாளும்
அந்த அழகிய
தருணத்தை
ஞாபகப்படுத்திக்கொண்டே தான்
இருக்கும்..
எந்தன் சுவாசம் கொடுத்து
உன்னை பெற்றெடுத்த நினைவுகள்...
அப்பப்பா என்ன சுகமான
நினைவுகள்..
உனக்கான என் முதல் முத்தம்...
காற்றில் மிதந்து கிடந்த போன்றதொரு நிமிடமடா
என் செல்வமே..
உன் பிறப்பில் நானும்
அல்லவா மீண்டும் பிறந்தேன்...
என் வாழ்வில் அர்த்தமாய்
தோன்றிய
என் செல்ல மகனே
உனக்கு என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்...!