அணுகுமுறையில்
கடலளவு எண்ணம் கண்டு
கலங்காத உள்ளம் கொண்டு
திடமான வாழ்கை என்று
எதிர்காலம் நமக்குமுண்டு
ஏன் இந்த மயக்கம் என்று
விளங்காத மர்மமுண்டு
தேற்றுதற்கு நானுமுண்டு
சொல்வதற்கு கடவுளுண்டு
அணுகாத வெற்றியுண்டு
அனுபவிக்க நேரமுண்டு
வியக்க வைக்கும் செயலும் கண்டு
வீறுகொண்டால் வெற்றியுண்டு
விமானம் தாழ்வாகப் பறக்குது என்று
தலை மேல் கை வைப்பதுண்டு
மேகம் முட்ட பறப்பது கண்டு
அண்ணாந்து வியப்பதும் உண்டு
வாழ்வென்றால் நிஜமும் என்று
வையகத்தில் நினைப்பர் உண்டு
நாம் வந்தேறு குடிகள் என்று
நினைப்பவர் எவருமில்லை இன்று
வாழ்வு நிலைக்கும் எண்ணம் கொண்டு
மனிதன் வருந்தா உள்ளம் கண்டு
வருந்துகின்றான் வள்ளல் அவன் இன்று
இரங்கும் வரிசையில் நின்று
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

பதிலாக வேண்டும்...
மெய்யன் நடராஜ்
02-Apr-2025

முட்களின் பரிவு...
தாமோதரன்ஸ்ரீ
02-Apr-2025
