பாஸ்கல் விதியும் ரேவதி ஊடலும்

பேசவில்லை நீ
கோபங்கள்...
தனியே நீயும்
தனியே மனமுமாய்...
திட்டி தீர்க்கிறாய்
என்னுள் உன்னை...
ஆவலில் குழைந்த
தொல்மனம் விசும்பி
வீங்கி நெருக்கிடும்
நாணத்தின் சாயலிது.
என்மீது சாய்ந்து நீ
வடிக்கின்ற கண்ணீர்
என் தோள் நனைக்கும்
சலனத்தின் வெப்பமாக.
சட்டென எழுந்து
ஒற்றை குருவியென
தத்திச்சுற்றி வருவாய்.
கால் புதையும் மணலில்
மௌனம் புதையுமா?
கிளைப்பறவை கண்டு
ஓரவிழி காட்டுகையில்
என் புருவ நெளிவில்
ஒளிந்திடும் சிரிப்பினை
ஊடும் உன் கண்கள்
கவர்ந்து காட்டிவிட்டது.
கண்ணீரின் இத்துளியும்
காதலின் தீர்த்தமா?
கனவில் சிலிர்த்த
மழலையின் அகமுறுவலா?

எழுதியவர் : ஸ்பரிசன் (5-Apr-18, 7:20 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 99

மேலே