பச்சை மலை ஓரம் குறும்பா நீரோடைகள்

பச்சை மலை ஓரம்
பாடி வரும் தென்றல்
பார்க்க அவளும் வந்தாள் !

மார்கழிப் பனியில் நனைந்தனர்
மல்லிகையும் சூடிய அவளும்
புள்ளிக்கோலம் சிலிர்த்தது புன்னகையில் !

வெண்நிறப் பூக்கள் வானெங்கும்
வெண்ணிலா மலரும் வந்தாள்
நானுமவளும் வந்தோம் நிறைவுசெய்ய !

கோடையில் உதகைகொடை சொர்க்கம்
குளிரில் சிம்லாகாஷ்மீர் சொர்க்கம்
மாலையில் அவள்வரின் மெரீனாவே சொர்க்கம் !

குளிரில் உல்லன் ஸ்வெட்டர்
காணாததிற்கு தலையில் மங்கிகுல்லா
நடந்தேன் டார்வின்தியரியின் நிஜமாக !

வயல்செழிக்கப் பாயும் வாய்க்கால் ஓடை
பயிர்வளரப் பாடுவாள் தெம்மாங்கு
நிலமகள் நிமிர்ந்து நிற்பாள் நெல்நிறை கதிரோடு !

எழுதியவர் : கவின் சாரலன் (24-Dec-18, 9:51 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 83

மேலே