விடுதலைப் போராட்ட வீரதீரன்

*தீரன் சின்னமலை*

பாடலுக்குச் செல்லுமுன்
விக்கிப்பீடியாலிருந்து
தீரன் பற்றிய சிறுகுறிப்பு::
====================

முழுப்பெயர்
தீர்த்தகிரிக் கவுண்டர்
மருதப் பாவரங்கம் :: தலைப்பு :: தீரன் சின்னமலை

தந்தை ரத்னசாமி கவுண்டர்
தாய் பெரியாத்தா
பிறப்பு 17 ஏப்ரல் 1756

இந்திய விடுதலைப் போராட்ட வீரர், தமிழகத்தில் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை எதிர்த்து கருப்ப சேர்வையுடன் இணைந்து போரிட்டவர்களுள் ஒருவர். கொங்கு நாட்டில் ஓடாநிலைக் கோட்டை கட்டி ஆண்டவர்.

இடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன. சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது.

தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார்.கொங்கு நாடு அப்பொழுது மைசூரார் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது.

ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகட்கு விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வழங்கலாயிற்று என்ற கருத்து பரவலாக உள்ளது

===================

தீர்த்தகிரிச் சக்கரையாம் தீரனவன் சின்னமலை

போர்த்திறமை கொண்டபெரும் போராளி - சீர்செய்த

தீரன் விடுதலைக்குத் தன்தலை ஈந்தவன்

*வீரன் அவனே வியப்பு*

=================
நேரிசை வெண்பா
=================


பெரியாத்தா பெற்றெடுத்த பாச வீரன்
...............பெருவாழ்வை விடுதலைக்கே பணித்த தீரன்
வரிகொண்டு சென்றவனை வழிம றித்து
...............வாரிவாரி வழங்கினானே ஏழை கட்கு
பிரியமான சிவந்தாரின் சீட னானான்
...............போர்களிலே திப்புவுக்கு நெருக்க மானான்
பிரித்தானி யவரையோட வைத்த சிங்கம்
...............பாரதத்தாய் பெற்றவோர்நம் உடலின் அங்கம்

========================
எண்சீர் ஆசிரிய விருத்தம்
========================

கவிஞர் பெருவை பார்த்தசாரதி

எழுதியவர் : கவிஞர் பெருவை பார்த்தசார (17-Apr-20, 1:43 pm)
பார்வை : 623

மேலே