கவிஞர் பெருவை பார்த்தசாரதி- கருத்துகள்
கவிஞர் பெருவை பார்த்தசாரதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [126]
- கவின் சாரலன் [86]
- நன்னாடன் [53]
- Palani Rajan [46]
- கோவை சுபா [34]
சடையப்ப வள்ளல் கம்பரின் புரவலர். கம்பன் காவியம் பாடப்பட்ட காலத்தில் சோழப் பேரரசனின் ஆதரவு இல்லாமல் சடையப்ப வள்ளல் ஆதரவுடன்தான் பாடப்பட்டது. அவரைப் புகழ்ந்துக் கம்பர் 100 பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் தன் கம்பராமாயணத்தில் எழுத, மற்றப் புலவர்கள் ஆயிரத்துக்கு ஒரு பாட்டில் குறிப்பிட்டால் போதும் என்றுக் கூறிவிட, கம்பர் இவ்வாறுக் கூறுவார். "சடையப்ப வள்ளல் நூற்றில் ஒருவர் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் கூறியபடி அவர் 'ஆயிரத்தில் ஒருவர்' ஆகிறார். அப்படியே செய்கிறேன்...என்றாராம் கம்பர்...
வெண்ணெய்நல் லூர்கொடுத்த வள்ளல் சடையனை
எண்ணத்தில் என்றுமே ஏற்று.!
வெண்ணெய்நல் லூர்கொடுத்த வள்ளல் சடையப்பர்
எண்ணத்தில் என்றுமே ஏற்று.!
குறிப்பு:: சடையப்ப வள்ள்லை, வெண்ணெய்ச்சடையன் என்றே கமபர் தன்பாடல்களில் குறிப்பிடுகிறார்.
கருத்துரைக்கு நன்றி மரபுக் கவிஞரே
நன்றி
நன்றி அய்ய நற்றமிழ்ப் பாவலரே
மூத்தோர்சொல் செவிமடுத்தும்
மதிக்காத இளைஞர்கள்
கூத்தாக நினைத்ததாலே
கொரோனாவும் தாக்கியதே
தாத்தாசொல் கேட்டுப்பின்
அதையொழுகி நடந்திடவே
பூத்தமலர் போலென்றும்
புவிதனிலே மகிழலாமே.!
===============
*கலிவிருத்தம்*
===============
புலனத்தில் இன்றைக்கு வருவதெல்லாம், பண்டைக் கலாச்சாரத்தைப் போற்றுகின்ற வகையிலே, சுத்தம் சோறு போடும் என்பதற்கேற்ப, அன்றாடம் பின்பற்றிய அனைத்தும் நமக்கு நன்மை பயக்கும் என்பதாகவே வலம்வருகிறது.
வீதியில் சென்று வந்தால் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பு கை, கால் சுத்தம் செய்வதிலிருந்து வாசலில் சாணி தெளிப்பது வரை அனைத்தும் கிருமிகளைக் கொல்லும் என்கிற மிகப்பெரிய தத்துவத்தை இன்றுதான் உணர்ந்தது போல கட்டுரைகளும், கவிதைகளும், ஹைக்கூவும், துளிப்பாவும் வெளிவருகின்றன.
கவிஞர் பெருவை பார்த்தசாரதி
அடைந்திருக்கும் துன்பம் அளவிலை.! சற்றே
விடைதரக் கூடும் விரைந்து.!
குறள் வெண்பா
கவிஞர் பெருவை பார்த்தசாரதி
சரணடைய வைக்கும் சதி.
=======================
சதித்திட்டம் போட்டவர்கள் சைனாவே தானே
விதியும் அவரை விடாத - கதிதான்.!
பரந்த மனதில்லா பாழும் மனிதா
சரணடைய வைக்கும் சதி.!
நேரிசை வெண்பா
கவிஞர் பெருவை பார்த்தசாரதி
மலர்ச்சோலை மகிழ்விக்கும்....
அலப்பரையது மனிதரையது ஆட்கொண்டது அன்று..!
உலகளவிலே விரவிடுமிது உயிர்க்கொல்லியாம் இன்று ..!
பலபறவையும் விலங்கினமுமாய் பலவுயிரின வாழும்..!
மலர்சோலையு மானாலது மகிழ்வாக்குது நாளும்..!
கனி = கனி = கனி = தேமா
கவிஞர் பெருவை பார்த்தசாரதி
கடந்த வருடங்களில், வேறொரு தளத்தில் என் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறேன்.. ஞாபகம் வைத்துக்கொண்டதற்கு நன்றி அய்ய
நன்றி
அய்யா நான் வேறொரு தளத்தில் படைப்புகளைப் பகிர்ந்து வருகிறேன்.. புத்தாண்டில் தங்களின் ஆசி கிடைத்ததய்யா..நன்றி இனி தொடருவோம்..
கல்லும் கனியும் கனிந்த விழியாலே
சொல்லை உதிர்த்தால் சிறப்பு...
குறள் வெண்பா
ஆர்ப்பரிக்கும் கட்டழகில் ஆணழகன் கார்முடியும்
கூர்அம்புப் பார்வையழ கூட்டுமே.! - பேர்சொல்லப்
பார்த்திடத் தோன்றும் பரவச மூட்டுமாம்..!
*ஈர்த்திடும் தாடி இனிது*
=============================
ஒரு விகற்ப நேரிசை வெண்பா
=============================
*வீறியெழும் சார்வரி*
===================
ஆர்த்தெழுந்தே மேலோங்கும் ஆண்டுகளில் வித்தியாசம்
ஈர்க்குமே நம்மையே இந்தவேளை - போர்க்கொடி
தாங்கிய தொற்றைத் துரத்தவல்ல ஆற்றலைத்
*தாங்களே சார்வரியே தா*
================
நேரிசை வெண்பா
================
60 ஆண்டுகளின் பெயர்களில், சற்றே வித்தியாசமான தமிழ்ப்புத்தாண்டான சார்வரிக்குத் தமிழில் *வீறியெழல்* என்று பெயராம். பெயருக்கேற்றார்ப்போல், ஆர்த்தெழும், வீறியெழும், வெகுண்டெழும் *சார்வரியைப் பார்த்து,விரைந்து பரவும் தொற்றை ஒழிக்க* வேண்டுவோம்.
நீண்ட நாட்களாக நான் இந்தத் தளத்தில் ஏதும் பதிவிடவில்லை, எனினும், தங்களின் தமிழ்ப் பற்றால், மீண்டும் இத்தளத்தில் நுழைய விரும்புகிறேன்..நன்றி அய்யா
படைப்பை திருத்தினால் முழுதும் அழிந்து விடுகிறது....தளத்தில் ஏதோ கோளாறு, சரி செய்யவும்
ஜல்லிக்கட்டு
புத்தகக்கட்டில் முகம் புதைத்த மாணவர்களே!
புத்தம்புதிய போராட்டம் வெற்றிபெற
ஜல்லிக்கட்டில் காளையெங்கள் துயர்துடைக்க வாருங்கள்...
வில்லெடுத்துப் போர்தொடுங்கள் வெற்றி பெற
கட்டிடப் பரப்பில் வாசம்செய்யும் மாணவர்களே
கட்டான தேகத்துடன் உரிமைகுரல் கொடுக்கவாரீர்.
படித்துவிட்டு வேலையில்லையென்று சொல்லாதீர்கள்!
படிக்காது உழைக்கும் நாங்கள்போராட வேலைதருகிறோம்
இரைப்பைநிரப்ப இரத்தம்சிந்தும் எங்களுக்காக
இனமான எழுச்சிபொங்கப் போராட வாருங்கள்!
உங்களுக்காக வண்டியும் ஏரும் செக்குமிழுத்தோம்
எங்களுக்காக அரசியலை இழுக்காதீர்கள் எழுச்சிகொள்வீர்!
எங்களுழைப்பால் உங்கள்உலை கொதிக்கும் போது...
எங்களுக்கோர் இழுக்கென்றால் உங்களிரத்தம் கொதிக்கும்.
முகம்மூடியிருந்த களைப்பை மறைத்துவிட்டு...
சமூகம் விழிப்பைப்பெற ஓசையெழுப்பிக் குரல்கொடு!
தடுமாற்றமில்லா அமைதிப் போராட்டம் வெற்றிபெற
கொடுத்து உதவுங்கள் உங்கள் ஆதரவை
வாடிவாசலுக்கு வந்துபாரெங்கள் வேகத்தை...
வாடிய உங்கள் முகம்கூட பிரகாசிக்கும்!
ஈராண்டாய் விளையாட்டில்லை தினவெடுத்த திமில்
போராடி வெற்றிபெற பலத்தைக் கொடுக்கும்!
உன்னால் முடியவில்லை என்றொருசொல் போதும்...
உடனே தடைகளைமுட்டி வேரொடு சாய்க்கிறோம்
ஏறுதழுவ போராடும் இப்போராட்டம் வரலாற்றில்
வீறுகொண்டு எழுந்து சிலையாய் நிற்கும்
கருத்துரைக்கு நன்றி திரு ரவி அவர்களே..
இன்னும் சற்று விரிவாக விவாதத்தைப் பற்றியும் சொல்லலாம். விவாதம் என்பது நீங்கள் சொல்வதுபோல் போட்டி என்றே கொண்டாலும், அதன் முடிவு பயனுள்ளதாக இருக்க வேண்டுமென்பதே இப்பாடலின் உட்கருத்து..